மாதவிடாய் நேரத்துல மெத்தைல படுக்க கூடாதா? ஆவேசமான சின்மயி
பிரபல பாடகியான சின்மயி சமீபத்தில் பேசிய வீடியோ ஒன்று கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
அதில், மாதவிடாய் பற்றியும், கன்னித்தன்மை பற்றியும் பேசியிருக்கிறார், மேலும், மாதவிடாயை காரணம் காட்டி பெண்களை தள்ளிவைக்கின்றனர்.
இதற்கு காரணம் இருக்கிறது என்று சொல்வதையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது. இது ஒருவகையான தீண்டாமை தான், இது பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.
எத்தனையோ விஷயங்களில் நான் மாறினாலும் மாதவிடாய் விஷயத்தில் மாறவே இல்லை. அதை ஒரு காரணமக கூறி பெண்களை ஒதுக்கும் அவலம் இன்னும் உள்ளது. இதற்கு காரணம் மாதவிடாய் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததே ஆகும்.
இன்றைக்கு எல்லாமே டோர் டெலிவரி தான், அதை சமைத்தவர்கள் மாதவிடாயில் இருந்தார்களா? இல்லையா? என்று யோசிப்பது இல்லை.
மருத்துவமனைக்கு சென்றால் கூட மருத்துவர்கள் மாதவிடாய் இருக்கிறதா? என்று கேட்பது இல்லை, அதையெல்லாம் விட்டுவிட்டு வீட்டில் இருக்கும் பெண்களுக்கு வந்தால் மட்டும் வலிக்கிறதா உங்களுக்கு என ஆவேசமாக பேசியுள்ளார்.
மேலும் முதலிரவின் போது பெண்ணுக்கு சில அறிகுறிகள் தென்படாவிட்டால் அந்த பெண்ணுக்கு கன்னித்தன்மை (virgin) இல்லை என்று சொல்வது உண்டு.
ஒரு பெண் கன்னித்தன்மைக்கு எந்த வரையறையும் இல்லை. ஆனால் சிலர் சொல்லும் கட்டுக்கதைகளை எல்லாம் சகிக்க முடியவில்லை.
கன்னித்திரை கிழியாமல் இருந்தால்தான் அந்த பெண் பத்தினி என்று சொல்வது உண்டு. நீ பத்தினியா இல்லையா? நீ பவித்ரமானவளா இல்லையா? என்று கேட்டால் யோவ் போய்யா.'''என்று உதாசீனப்படுத்திவிட்டு செல்லுங்கள் என்கிறார் சின்மயி.

விசா இல்லாமல் பணி! லண்டனில் தேடுதல் வேட்டை - மாதம் 6,000 பவுண்ஸ் சம்பாதித்தவர் அகப்பட்டார் IBC Tamil
