இவுங்க கிட்ட நியாயம் கேக்கவா..? முதல்வரை காட்டி விமர்சனம்..! சின்மயி ஆதங்கம்..!

M K Stalin Vairamuthu Chinmayi
By Karthick Jan 02, 2024 12:30 PM GMT
Report

பின்னணி பாடகி தொடர்ந்து எழுத்தாளர் வைரமுத்து குறித்து பல நேரங்களில் விமர்சனத்தை வைத்து வருகின்றார்.

சின்மயி - வைரமுத்து  

MeToo'வில் பெரும் பரபரப்பானது சின்மயி பிரபல பாடலாசிரியர் வைரமுத்து மீது வைத்த குற்றசாட்டுக்கள் தான். சினிமா துறையில் மிகவும் பிரபலமாக இருந்த ஒருவர், மிகவும் பிரபலமாக இருக்கும் மற்றொருவர் மீது குற்றச்சாட்டு வைக்க அது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

chinmayi-slams-vairamuthu-with-mk-stalin-in-event

பெரும் விமர்சனங்களை பெற்றாலும், இப்போதும் வைரமுத்து மீது தனது குற்றசாட்டை வலுவாகவே வைத்து வருகின்றார் சின்மயி. இந்த சூழலை அவர் தற்போது முதல்வர் முக ஸ்டாலினை சுட்டிக்காட்டி, வைரமுத்துவை விமர்சித்தது பெரும் அதிர்வலைகளை சமூகவலைத்தளத்தில் ஏற்படுத்தியுள்ளது.

முதல்வரை காட்டி 

கவிஞர் வைரமுத்துவின் ‘மகா கவிதை’ நூலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பெற்றுக்கொண்டார். இந்த விழாவில் கமல்ஹாசன், மயில்சாமி அண்ணாதுரை போன்றோர் கலந்து கொண்டனர்.

இது குறித்து கருத்து தெரிவித்த சின்மயி, நான் தடைசெய்யப்பட்டபோது தமிழ்நாட்டின் மிகவும் சக்திவாய்ந்த மனிதர்களில் சிலர் என்னைத் துன்புறுத்தியவரை மேடையேற்றினர் - ஆனால் எனது வாழ்க்கையின் பல ஆண்டுகள் தொலைந்துவிட்டன.

பாலியல் குற்றவாளிகளை ஊக்குவிக்கும் மற்றும் ஆதரிக்கும் ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் அமைப்பும், நேர்மையாகப் பேசும் நபர்களை சிறையில் அடைக்கும் போது, ​​இந்தக் கணத்தில் இருந்தே அழிந்து போகட்டும் என்றும் என் விருப்பம் நிறைவேறும் வரை நான் ஜெபிப்பேன், தொடர்ந்து ஜெபிப்பேன் - எப்படியும் என்னால் வேறு எதுவும் செய்ய முடியாது என பதிவிட்டுருந்தார்.

இவரின் இந்த பதிவு வைரலாக பலரும் பலதரப்பட்ட கருத்துக்களை பதிவிட துவங்கினர்.அதில், ஒருவர் நீங்கள் என பாலியல் சீண்டலுக்கு எதிராக இயக்கம் ஒன்றை துவங்ககூடாது என்று வினவினார். அதற்கு பதிலளித்த சின்மயி,‘ தொடங்கி? எவன்கிட்ட நியாயத்துக்கு போகறது? இவங்ககிட்டயா?வைரமுத்துவிடம் இருக்கும் அரசியல்திகள் மட்டும் எவ்ளோ பேருன்னு பாருங்க. இந்த மாதிரி ஒரு சூழலில் நியாயம் எப்படி கிடைக்கும் என்று பதிலளித்துள்ளார்.