விஜய் சொன்ன கெட்ட வார்த்தை...5 வருசமா..கஷ்டப்பட்டேன்!! பாடகி சின்மயி
லியோ படத்தில் திரிஷாவிற்கு டப்பிங் பேசி 5 வருடத்திற்கு பிறகு தமிழ் திரையுலகில் என்ட்ரி கொடுத்துள்ளார் பின்னணி பாடகி சின்மயி.
லியோ
விஜய் லோகேஷ் கூட்டணியில் வெளியான "லியோ" படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், வசூலில் நாளுக்கு நாள் சாதனைகளை படைத்து வருகிறது.
இது வரை இல்லாத விஜய்யின் மாறுபட்ட நடிப்பு, LCU கனெக்ஷன் போன்றவை ரசிகர்களை பெருமளவில் குதூகலிக்க வைத்துள்ளது. இப்படத்தில் திரிஷாவிற்கு டப்பிங் பேசி இருக்கிறார் பின்னணி பாடகி சின்மயி.
வைரமுத்து மீது இவர் வைத்து குற்றச்சாட்டின் அடிப்படையில் இவருக்கு தமிழ் சினிமாவில் பணியாற்ற 5 வருடங்கள் தடை விதிக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து தற்போது அவர் மீண்டும் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளார்.
விஜய் சொன்ன கெட்ட வார்த்தை
இந்நிலையில், இது குறித்து அவர் தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில் படத்தில் விஜய் பேசியிருக்கும் கெட்ட வார்த்தை படத்தின் ட்ரைலர் வெளியான பிறகு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது என குறிப்பிட்டு, ஆனால் தான் டப்பிங் பேசும் போது அதனை கவனிக்கவில்லை என குறிப்பிட்டார்.
ஆனால் விஜய் அவ்வாறு பேசியது தனக்கு வருத்தமே என குறிப்பிட்ட சின்மயி, கடந்த 5 ஆண்டுகளாக தன்னை விஜய் கூறிய கேட்ட வார்த்தையை வைத்து பலரும் விமர்சித்ததாக தெரிவித்தார். இருப்பினும்,முதலில் கஷ்டமாக இருந்த போதிலும், தொடர்ந்து அதே வார்த்தையை பயன்படுத்தி வந்த காரணத்தால் தனக்கு அது மரத்து விட்டது என்றும் சின்மயி அப்பேட்டியில் தெரிவித்துள்ளார்.