பாண்டே என்ன harass பண்ணார்..விக்கி விக்கி அழுதேன்...ஆனா யாருமே கேக்கல!! சின்மயி வருத்தம்!!
தான் சொன்ன குற்றசாட்டுகளை குறித்து யாராவது முதலில் வைரமுத்துவிடமோ அல்லது ராதா ரவியிடமோ இதுவரையில் கேள்வி எழுப்பப்பட்டதா? என பின்னணி பாடகி சின்மயி கேள்வி எழுப்பியுள்ளார்.
சின்மயி பேட்டி
தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வந்த பின்னணி பாடகி சின்மயி, 5 ஆண்டுகள் விதிக்கப்பட்ட தடைக்கு பிறகு அண்மையில் வெளியான விஜய்யின் "லியோ" படத்தில் நடிகை திரிஷாவிற்கு டப்பிங் கொடுத்து மீண்டும் தமிழ் திரையுலகில் களமிறங்கியுள்ளார்.
அதனை தொடர்ந்து பல பேட்டிகளை கொடுத்து வரும் சின்மயி அண்மையில் அளித்த பேட்டியில், ஒரு பெரிய இடத்தில இருக்கும் நபர் ஒருவர், நம்மிடம் தவறாக நடந்து கொள்வதை நம் மனதே முதலில் ஏற்றுக்கொள்ளாது என கூறி, அவர் நல்லவர் நாம் தான் அவரை தவறாக புரிந்து கொண்டோம் என்று நினைப்போம் என்றார்.
ஆனால், நம்முடைய உடல், அந்த நபர் செய்யும் தவறை சொல்லும் என குறிப்பிட்ட அவர், ஆனாலும் அந்த கஷ்டத்தை வெளியில் சொல்லாமல் அனுபவிக்க வேண்டும் என்றே நமக்கு சொல்லப்படுகிறது என்றார்.
அவுங்கள யாராவது கேள்வி கேட்டாங்களா?
இது போன்ற சம்பவம் என் வீட்டில் வேலை செய்த பெண்ணை, கணவர் குடித்துவிட்டு அடித்து கொடுமைப்படுத்தினார் - ஆனால், அந்த பெண் என் கணவர் ரொம்ப நல்லவர் என்பர் என்றார். தொடர்நது பேசிய சின்மயி, மீடூ விஷயம் குறித்த நான் பேசிய போது 35 வயதில் சின்மயிக்கு வந்த அறிவு, 19 வயதில் ஏன் இல்லை என்ற கேள்வி கேட்பது அறிவு கெட்டத்தனமாக இருக்கிறது என விமர்சித்த அவர், என்னை எத்தனை பேர் நிற்க வைத்து கேள்வி கேட்டார்கள் - ஆனால், வைரமுத்து, ராதா ரவியை ஏன் கேள்வி கேட்கவில்லை என்று வினவினார்.
ஆனால் அவ்வாறு கேட்கமாட்டாங்க ஏன் என்றால், மீடியாவில் இருக்கும் முக்கால் வாசி பேர் ஆண்கள், இவர்கள் எந்த காலத்திலும் மற்றொரு ஆ,ண் செய்த தவறை கேள்வி கேட்க மாட்டார்கள் என்று அதிரடியாக அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார் சின்மயி.
மேலும், தொகுப்பாளர் பாண்டேவிற்கு கொடுத்த நேர்காணலில், அவர் என்னை நக்கல் அடித்தார் என்றும் அந்த நேர்காணல் முடிந்த பின்னர் நான் விக்கி விக்கி அழுது கொண்டே வந்தேன் என்ற சின்மயி, காரணம் அவரை எப்படி சமாளிப்பது என்று எனக்கு தெரியவில்லை என்று கூறி, ஆனால் இன்று இருக்கும் தெளிவு, அன்று எனக்கு இருந்திருந்தால் நான் அதனை வேறு விதமாக கையாண்டு இருப்பேன் என்று தெரிவித்தார்.