மேடையில் உடை குறித்து கொச்சைப்படுத்திப் பேசிய நடிகர் சதீஷ் - வெச்சு விளாசிய சின்மயி...!

Sunny Leone Sathish Chinmayi
By Nandhini Nov 10, 2022 10:15 AM GMT
Report

தர்ஷா குப்தாவின் உடை குறித்து மேடையில் சர்ச்சையாக பேசிய நடிகர் சதீஷை விளாசியுள்ளார் பிரபல பாடகியான சின்மயி.

பிரபல பாடகி சின்மயி

பிரபல பின்னணி பாடகி சின்மயி, ஏ. ஆர். ரகுமான் இசையில் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் இடம்பெற்ற ‘ஒரு தெய்வம் தந்த பூவே’ என்ற பாடல் மூலம் பட்டித்தொட்டியெங்கும் பிரபலமானார். பல படங்களில் இவர் கதாநாயகிகளுக்கு பின்னணி குரல் கொடுத்திருக்கிறார்.

திருமணம்

சின்மயி கடந்த 2014ம் ஆண்டு நடிகர் ராகுல் ரவீந்திரன் என்பவரை திருமணம் செய்தார்.

சர்ச்சை

கடந்த சில ஆண்டுகளாகவே சின்மயியை சுற்றி சர்ச்சையான கருத்துக்களும், விமர்சனங்களும் வலம் வர தொடங்கியது. கவிஞர் வைரமுத்து மீது அவர் கொடுத்த மீடூ புகார் ஒட்டுமொத்த திரையுலகையே அதிர்ச்சியடைய செய்தது. அன்றிலிருந்து இன்றுவரை சின்மயி தொடர்ந்து அதுகுறித்து சமூகவலைதளங்களில் பேசி வருகிறார்.

சதீஷை வெச்சு விளாசிய சின்மயி

இந்நிலையில், தர்ஷா குப்தாவின் உடை குறித்து மேடையில் சர்ச்சையாக பேசிய நடிகர் சதீஷை விளாசியுள்ளார் பிரபல பாடகியான சின்மயி.

அதாவது, பாலிவுட் சினிமாவின் கவர்ச்சி நடிகையான சன்னி லியோன் தமிழில் நடித்துள்ள திரைப்படம் ‘ஓ மை கோஸ்ட்’. இப்படத்தில் சன்னி லியோன் பேயாக நடித்திருக்கிறார். இப்படத்தில் சதீஷ், தர்ஷா குப்தா, ஜிபி முத்து உள்பட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் இப்படத்தில் நடித்த அனைவரும் கலந்து கொண்டனர். அப்போது, இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சதீஷ் மும்பையிலிருந்து வந்த நடிகை சன்னி லியோன், நம் கலாச்சாரத்தின் சேலையை அணிந்து வந்திருக்கிறார்.

நம்ம கோயம்புத்தூர் பெண் தர்ஷா குப்தாவின் டிரெஸையும் பாருங்கள் என்று மேடையிலேயே பலர் முன்னிலையில் அவர் உடையை குறித்து பேசியுள்ளார். தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பலர் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பிரபல பாடகி சின்மயி நடிகர் சதீஷின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

chinmayi-sathish-dharsha-gupta-sunny-leone

சின்மயி கண்டனம்

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், ஒரு பெண்ணை சுட்டிக் காட்டி அவர் கலாச்சாரத்திற்கு ஏற்ப ஆடை அணியவில்லை என ஒரு மாஸ் கூட்டத்தில் ஒரு ஆண் பேசுகிறார்.

ஆண்களின் இந்த நடத்தை எப்போது நிறுத்தப்படும்? இது வேடிக்கை இல்லை. என்று பதிவிட்டுள்ளார். சின்மயின் இந்த பதிவுக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.