ஞான பீட விருது: விமர்சித்த சின்மயி- என்ன சொல்லியிருக்கிறார்?
தமிழ் இலக்கியத்தில் மிக உயர்ந்த மரியாதையாக கருதப்படும் ஞான பீட விருது கவிஞர் வைரமுத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
2002ம் ஆண்டுக்கு பின்னர் தமிழ் மொழியில் கவிஞர் வைரமுத்துக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
வைரமுத்து அவர்களுக்கு பிரபல நடிகர்கள் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
சின்மயி தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்துள்ளார், அதில், சினிமாவில் சக்திவாய்ந்த ஆண்கள் அரசியலுக்கு செல்லும்போது, அவர்களால் பாதிக்கப்பட்டதாக பெண்கள் கூறும் விஷயங்களை யாரும் கேட்க விரும்புவதில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

கமல்ஹாசனின் வாழ்த்தை மேற்கோள்காட்டி, அவரது கட்சியிலேயே இருந்த ஒரு பெண் வைரமுத்துவின் பெயரை முன்பு கூறியிருந்தார். ஆனாலும் பல ஆண்கள் தங்களது நண்பர்கள், வழிகாட்டிகள், உறவினர்கள் என்ற காரணத்தால் அவர்களையே ஆதரிப்பார்கள்.
நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட வாழ்த்து பதிவையும் மேற்கோளாக காட்டி, "அய்யோ... புரியவே புரியாதா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
சின்மயியின் தொடர்ச்சியான இந்த பதிவுகள் சமூகவலைத்தளங்களில் விவாத்தை கிளப்பியுள்ளன, பலரும் ஆதரவாகவும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
1975ம் ஆண்டு எழுத்தாளர் அகிலன் அவர்களுக்கும், 2002ம் ஆண்டு எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களுக்கும் இந்த விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
