சின்மயி வாயை திறந்தாலே இப்படி நடக்குதே..அட கடவுளே.. இன்ஸ்டாகிராம் பக்கம் முடக்கம்..!

Tamil Cinema Vairamuthu Chinmayi
1 மாதம் முன்

தொடர்ந்து ஆரோக்கியமற்ற பதிவுகள் மற்றும் குறுச்செய்திகள் குறித்து பிரபல பின்னணி பாடகி சின்மயி இஸ்டாகிராம் நிறுவனத்திற்கு புகார் அளித்திருந்த நிலையில் அவரின் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.

அறிமுகம் 

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் இடம்பெற்ற ‘ஒரு தெய்வம் தந்த பூவே’ பாடலை பாடியதன் மூலம் தமிழ் திரையுலகில் பாடகியாக அறிமுகமானவர் சின்மயி.

இதையடுத்து பல்வேறு முன்னணி இசையமைப்பாளர்களுடன் பணியாற்றிய சின்மயி, குறுகிய காலத்திலேயே பல பேமஸ் பாடல்களை பாடியதன் மூலம் பிரபலம் அடைந்தவர்.

சின்மயி வாயை திறந்தாலே இப்படி நடக்குதே..அட கடவுளே.. இன்ஸ்டாகிராம் பக்கம் முடக்கம்..! | Chinmayi Instagram Page Freeze

வாராயோ வாராயோ, சர சர சாரா காத்து, இதயத்தில் ஏதோ, கடந்த சில வருடங்களுக்கு முன் வெளியான 96 படத்தில் அவர் பாடிய பாடல்கள் பட்டிதொட்டி எங்கும் கலக்கியது குறிப்பிடத்தக்கது.

மீ டூ புகார் சர்ச்சை

இதனிடையே கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி கொடுத்த மீடூ புகார் திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதற்காக பல்வேறு எதிர்மறையான விமர்சனங்களை எதிர்கொண்டாலும், தன்னுடையை நிலைப்பாட்டில் தீர்க்கமாக உள்ள சின்மயி,

தனது கருத்துக்களை இடைவிடாது பதிவிட்டு வருகிறார். மேலும், பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளுக்கும் குரல் கொடுத்து வருகிறார். 

திருமணம்

இதனிடையே, 2014ம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலனான ராகுல் என்பவரை பெற்றோர்கள் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்துகொண்டார்.

தற்போது, சின்மயி இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். குழந்தைகளின் பெயர்களோடு, அவர்களின் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு அவர் மகிழ்ச்சியை பதிவு செய்தார்.

குழந்தை குறித்து சர்ச்சை கருத்து 

சின்மயிக்கு 37 வயது ஆகிறது இதனால் சின்மயி Surrogacy மூலம் அதாவது வாடகை தாய் மூலம் தான் குழந்தை பெற்று இருப்பார் என விமர்சனங்களுக்கு எழுந்து இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் இது குறித்து சின்மயி விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

அதில் ‘நான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை பதிவிடாததால் நிறைய பேர் எனக்கு DM மூலம் மெசேஜ் செய்து நான் வாடகை தாய் மூலம் தான் இரட்டை குழந்தையை பெற்றெடுத்தேனா என்று கேள்விகளை கேட்டு வருகின்றனர்.

என்னை பாதுகாத்துகொள்ள எனக்கு மிகவும் நெருக்கமானவர்களுக்கு மட்டும் இந்த விஷயம் தெரியும். நான் இப்போதும் எப்போதும் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பாதுகாத்து தான் வைப்பேன் என்றார்.

இன்ஸ்டாகிராம் பக்கம் முடக்கம் 

இந்நிலையில், தற்போது சின்மயியின் அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கு இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து, சின்மயி வெளியிட்டுள்ள பதிவில் 

“எனது இன்ஸ்டாகிராம் DMக்கு பல முகம் அறியாத நபர்கள் மோசமான பதிவுகளை அனுப்பி வந்ததை அடுத்து, எனது புகாரை தொடர்ந்து இன்ஸ்டா நிறுவனம் எனது கணக்கை நீக்கியுள்ளது. இது என்ன என்று எனக்கு புரியவில்லை” என கூறியுள்ளார். 

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.