லிங்கை க்ளிக் செய்ததும் காணாமல் போன பணம் - பாடகி சின்மயி குடும்பத்தில் TNEB-பில் மோசடி!

Tamil Cinema Crime Chinmayi Tamil Singers
By Jiyath Aug 12, 2023 07:53 AM GMT
Report

தங்கள் குடும்பத்தில் நூதன பண மோசடி நடைபெற்றுள்ளதாக பாடகி சின்மயி தெரிவித்துள்ளார். 

சின்மயி

தமிழ் திரைப் படங்களில் முன்னணி பாடகிகளில் ஒருவராக இருப்பவர் சின்மயி. கன்னத்தில் முத்தமிட்டால் என்ற திரைப்படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த 'ஒரு தெய்வம் தந்த பூவே' என்ற பாடலின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் சின்மயி.

லிங்கை க்ளிக் செய்ததும் காணாமல் போன பணம் - பாடகி சின்மயி குடும்பத்தில் TNEB-பில் மோசடி! | Chinmayi Fake Eb Bill Scam Post Goes Viral

பல திரைப்படங்களில் பாடல்களை பாடி வரும் இவர் சமூக பிரச்சனைகளுக்காகவும், மீ டூ (Me Too) போன்ற பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு எதிராகவும் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி குரல் கொடுத்து பதிவுகளை பகிர்ந்து வருகிறார்.

பண மோசடி

இந்நிலையில் தனது குடும்பத்தில் தூதன் முறையில் பண மோசடி நடைபெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சின்மயி 'எங்கள் குடும்பத்தில் ஒரு பெரியவரிடம் போலியான TNEB-பில்-பே ஸ்கேம் நடைபெற்றுள்ளது.

OTP எண் பகிரப்படாமலேயே இந்த மோசடி நடைபெற்றுள்ளதாகவும் செல்போனுக்கு வந்த லிங்கை க்ளிக் செய்ததும் வங்கிக் கணக்கில் இருந்த பணம் காணாமல்போனதாகவும் சின்மயி தெரிவித்துள்ளார்.மேலும் உங்கள் வட்டத்தில் உள்ள ஒவ்வொரு முதியவர்களிடமும் இதுகுறித்து தெரியப்படுத்தி அவர்களை பாதுகாக்குங்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.