"நான் கர்ப்பமாக இல்லை" - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபல பாடகி
தான் கர்ப்பமாக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பரவிய வதந்திகளுக்கு எதிராக பாடகி சின்மயி விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த சில தினங்களாக யூடிப் சேனல்களில் பாடகி சின்மயி கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அவரது தரப்பில் இருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. மாஸ்கோவின் காவிரி படத்தில் ஹீரோவாக அறிமுகமான நடிகர் ராகுல் ரவிந்திரனை சின்மயி கடந்த 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அவர் தனது எந்தவொரு தனிப்பட்ட தகவல்களையும், குடும்ப புகைப்படங்களையும் இணையத்தில் பகிர்ந்தது இல்லை.
இந்நிலையில் தன்னுடைய கர்ப்பம் தொடர்பாக இணையத்தில் பரவி வரும் செய்திகள் பொய் என்றும், பொய்யான செய்திகளை தயவு செய்து யாரும் பரப்ப வேண்டாம் என்றும் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் யாரும் மூக்கை நுழைக்க வேண்டாம் என சின்மயி கூறியுள்ளார்.