குழந்தைகள் வைரமுத்து போல் இல்லை? - பதில் கொடுத்த பாடகி சின்மயி
பாடகி சின்மயிடம் நெட்டிசன் கேள்வி எழுப்பி வந்த நிலையில் பதிலடி கொடுத்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
காதல் திருமணம்
பிரபல பாடகியான சின்மயி நடிகரும் இயக்குநருமான ராகுல் ரவீந்திரனை 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
ரவீந்திரன் வணக்கம் சென்னை படத்தில் இரண்டு கதாநாயகர்களில் ஒருவராக நடித்திருப்பார். பாடகி சின்மயி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு பாடல்களை பாடியுள்ளார்.
கன்னத்தில் முத்தமிட்டாள் பாடலை பாடி அறிமுகமான சின்மயி தொடர்ந்து பல்வேறு ஹிட் பாடல்களை பாடி பிரபலமானார். நடிகர் ராகுல் ரவீந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணம் ஆகி 8 ஆண்டுகளுக்கு பிறகு சின்மயிக்கு ஒரு பெண் ஒரு ஆண் வாடகை தாய் முறையில் இரட்டை குழந்தைகள் பிறந்தது. தங்களின் குழந்தைகளின் முகத்தை காட்டாமல் இருந்து வருகிறார் சின்மயி.
ரசிகர்களின் கேள்விக்கு பதிலடி கொடுத்த சின்மயி
இந்த நிலையில் ரசிகர்கள் இருவர் உங்கள் குழந்தைகளின் முகத்தை காட்டுங்கள் என கேட்டதற்கு, இந்த நேரத்தில் அவர்களின் முகத்தை காட்ட எனக்கு விருப்பம் இல்லை எனக்கு வெறுப்பு தான் வருது.
என் குழந்தைகளையும் அதற்கு உட்படுத்த விரும்பவில்லை. ஏனென்றால் வைரமுத்துவின் தம்பிகள் என்னிடம் வைரமும் முத்தும் பிறந்து இருக்கிறார்கள் என்று சொல்வது எனக்கு பழகிவிட்டது.
அதற்கு மேலே சென்ற அவர்கள், அவர் உன்னிடம் தவறாக நடந்துக் கொண்டும் ஏன் குழந்தைகள் அவரைப் போல இல்லை? என்று கேட்பார்கள்.
அந்த அளவிற்கு தான் இந்த தமிழ் கலாச்சாரமும் கலாச்சார டூட்ஸ்களும் இருக்கிறீர்கள் என்று எடுத்த எடுப்பிற்கெல்லாம் வைரமுத்துவை வம்பிற்கு இழுத்து பேசுகிறார் சின்மயி.