விசித்ரா பாலியல் விவகாரம்; யூஸ் இல்ல.. அரசியல்வாதிகள் சப்போர்ட் - சின்மயி கருத்து!

Tamil Cinema Bigg Boss Chinmayi Tamil Actress Vichithra
By Jiyath Nov 22, 2023 03:15 PM GMT
Report

பிக்பாஸ் விசித்ரா பாலியல் தொல்லை விவகாரம் தொடர்பாக பாடகி சின்மயி கருத்து தெரிவித்துள்ளார்.

நடிகை விசித்ரா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 7ல் நடிகை விசித்ரா போட்டியாளராக பங்கேற்றுள்ளார். ஆரம்ப காலத்தில் துணை நடிகையாக இருந்த விசித்ரா கதாநாயகி, வில்லி, டான்சர், நகைச்சுவை என அனைத்து கதாபாத்திரங்களிலும் நடித்து பிரபலமானவர்.

விசித்ரா பாலியல் விவகாரம்; யூஸ் இல்ல.. அரசியல்வாதிகள் சப்போர்ட் - சின்மயி கருத்து! | Chinmayi About Biggboss Vichitra Sexual Abuse Talk

தற்போது பிக்பாஸில் பங்கேற்றுள்ள இவர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இவருக்கு பல ரசிகர்களும் உள்ளனர். இந்நிலையில் விசித்ரா, சினிமாவில் நடிக்கும்போது தான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக பிக்பாஸில் தெரிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

அவர் கூறியதாவது "2001 ஆம் ஆண்டு படத்தின் ஹீரோ தன்னை ரூமுக்கு அழைத்துச் செல்லாத காரணத்தினால் டார்ச்சர் செய்ததாகவும், ஒரு நபரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகவும், ஸ்டண்ட் மாஸ்டரிடம் அதைப் பற்றி கூறியபோது எதுவுமே கேட்காமல் அவர் தன்னை கன்னத்தில் அறைந்ததாகவும்" தெரிவித்தார்.

அவன் என்மேல சாஞ்சு.. அந்த இடத்துலயே அடிச்சிட்டு ஓடிட்டான் - கீர்த்தி சுரேஷ் வேதனை!

அவன் என்மேல சாஞ்சு.. அந்த இடத்துலயே அடிச்சிட்டு ஓடிட்டான் - கீர்த்தி சுரேஷ் வேதனை!

சின்மயி கருத்து

இந்த சம்பவத்திற்கு எதிராக ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இது தொடர்பாக திரைப்பட பின்னணி பாடகி சின்மயி பதிவிட்டுள்ள எக்ஸ் பதிவில் "உடனே சொன்னாலும் யூஸ் இல்ல.

விசித்ரா பாலியல் விவகாரம்; யூஸ் இல்ல.. அரசியல்வாதிகள் சப்போர்ட் - சின்மயி கருத்து! | Chinmayi About Biggboss Vichitra Sexual Abuse Talk

இந்த ஊர்,அரசியல்வாதிகள் எல்லாம், துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு தான் ஆதரவு பண்ணுவாங்க. அப்றமா சொன்னாலும் ஒண்ணும் இல்ல. துஷ்பிரயோகம் செய்பவர்கள் பணம் சம்பாதிப்பதற்கும், தொழில் செய்வதற்கும், பிரபலமாக இருப்பதற்கும் சென்றனர் . அனு மாலிக் - அலிஷா சைனாய் வழக்கில் வெற்றி பெற்றார்கள், நினைவிருக்கிறதா?

இது தெரியாவிட்டால் கூகுள் செய்யவும். உதவி தேவைப்படுவோரை பாதுகாக்கும் அமைப்பு இல்லாத நிலையில் சங்கங்களால் என்ன பயன்? இத்தகைய அமைப்புகளில் உள்ள ஆண்கள் பணம் சம்பாதிப்பதற்காக இந்த ஆண்டுகளில் முதலில் துஷ்பிரயோகம் செய்பவர்களைச் சுற்றிச் சரி செய்ததாகத் தெரிகிறது, இல்லையா? என்று சின்மயி பதிவிட்டுள்ளார்.