உண்மையாவே நாங்க கரடிதான்; வேடமிட்ட மனிதர்கள் கிடையாது - பூங்கா நிர்வாகம் விளக்கம்!
சீன உயிரியல் பூங்காவில் உள்ள கரடிகள் குறித்து பூங்கா நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.
கரடிகள்
கிழக்கு சீனாவில் உள்ள ஒரு உயிரியல் பூங்காவில் கரடிகள் பின்னங்கால்களில் நிற்பது போன்ற புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது . இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆனது. இதில் கரடிகளின் மெல்லிய கால்கள் மற்றும் ரோமங்களில் உள்ள மடிப்புகள் காரணமாக சந்தேகம் எழுந்தது.
இணைய வாசிகள் மத்தியில் இது கரடிகளா இல்லை கரடி வேடமிட்ட மனிதர்களா என்று பரவலாக சந்தேகம் எழுப்பி வந்தனர். இந்நிலையில் அதற்கு பூங்கா நிர்வாகம் விளக்கமளித்து.
பூங்கா நிர்வாகம் விளக்கம்
அதில் அந்த கரடிகள் கூறுவது போலவே சமூக ஊடங்கங்களில் கரடியின் புகைப்படங்களை பதிவிட்டு 'மனிதர்களைப்போல் நிற்பதால் நான் வேடமிட்ட மனிதன்தான் என்று சிலர் கருதுகிறார்கள். ஆனால் நீங்கள் என்னை புரிந்து கொள்ளவில்லை என்று பூங்கா நிர்வாகம் பதிவிட்டுள்ளனர்.
ஒரு நபர் கரடி உடையை அணிந்திருந்தால், வெப்பம் காரணமாக சில நிமிடங்களில் அவர் படுத்துவிடுவார்" என்றும் கூறியுள்ளார்.