சீனர்கள் இரவில்தான் குளிப்பார்களாம் - என்ன காரணம் தெரியுமா?
சீனாவில் மக்கள் இரவில் குளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
குளியல் முறை
ஆசியாவில் உள்ள மற்ற நாடுகளில் இந்தியாவில் கடைபிடிக்கப்படுவது போல் குளியல் முறை கடைபிடிக்கப்படுவதில்லை. அதில் சீனா, ஜப்பான், கொரியா உள்ளிட்ட நாடுகளில் மக்கள் இரவில் குளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
பகலில் உடலில் சேறும் நச்சுக்கள் மற்றும் அழுக்குகளை வெளியேற்ற உதவும் எனக் கூறுகின்றனர். மேலும், நல்ல ஓய்வை பெற வழிவகுப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
நல்ல ஓய்வு
இந்தியாவை போலவே சீனாவிலும் வெப்பம் சற்று அதிகமாக இருப்பதால் அன்றாட பணிகளில் ஈடுபடும் மக்கள் அதிக வியர்வை சிந்த வேண்டிய சூழல் உள்ளது. எனவே, நோய் தொற்று ஏற்படாமல் பாதுகாக்க இரவு குளியல் முக்கிய பங்காற்றுவதாக நம்புகின்றனர்.
இருப்பினும், அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் கனடா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் காலையில் குளிக்கும் நடைமுறையே பின்பற்றப்படுகிறது.