‘’ என் பணத்தை தரமாட்டேங்கிறீங்களா ‘’ மூக்கு மேல் வந்த கோபம் , 8 லட்சம் மதிப்பிலான ஆடைகளை வெட்டி கிழித்த பெண் - வைரலாகும் வீடியோ

ஒருவருக்கு கோபம் வந்தால் அவர் என்ன செய்கிறார் என்பது அவருக்கே தெரியாது. அந்தவகையில் பெண் ஒருவர் தனக்கு ஏற்பட்ட கோபம் காரணமாக ஒரு கடையில் இருந்த ஆடைகளை வெட்டி வீசியுள்ளார் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வேகமாக வைரலாகி வருகிறது.

சீனாவின் பிரபல ஆடை வடிவமைப்பு கடையில் பெண் ஒருவர் தன்னுடைய திருமணத்திற்காக ஆடை வாங்க முன்பணம் செலுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.அவருடைய திருமணம் கொரோனா காரணமாக சற்று தள்ளி வைக்க குடும்பத்தினர் தீர்மானித்துள்ளனர்.

இதனால் அந்த பெண் அந்த கடைக்கு சென்று தான் செலுத்திய முன்பணத்தை தற்போது திருப்பி தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார். அந்த கடைக்காரர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளதாக தெரிகிறது.

இதைத் தொடர்ந்து அப்பெண் அந்த கடையில் வைக்கப்பட்டிருந்த திருமண உடைகளை திடீரென கத்திரிகோளை எடுத்து 32 ஆடைகளை வெட்டியுள்ளார்.   

அந்த கடைக்காரர் செய்வது அறியாமல் திகைத்து நின்றுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவை பலரும் ஆச்சரியத்துடனும் வியப்புடனும் பார்த்து வருகின்றனர்.

மேலும் அந்த பெண் 550 அமெரிக்க டாலர்களை முன்பணமாக செலுத்தியுள்ளதாக தெரிகிறது. ஆனால் அதற்கு அவர் வெட்டிய 32 ஆடைகளின் மொத்தம் மதிப்பு சுமார் 8.20 லட்சம் என்று கூறப்படுகிறது.

இது அந்த கடைக்காரருக்கு பெரும் நஷ்டமாக கருதப்படுகிறது. இந்த வீடியோ தொடர்பாக பலரும் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.   

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்