கொரோனா ஊரடங்கு நடவடிக்கைக்கு வித்திட்ட சீன மருத்துவ நிபுணர் திடீர் மரணம்!

COVID-19 China World
By Jiyath Oct 28, 2023 09:18 AM GMT
Jiyath

Jiyath

in சீனா
Report

கொரோனா ஊரடங்கு நடவடிக்கைக்கு வித்திட்ட சீன மருத்துவ நிபுணர் வூ சூன்யூ மரணமடைந்துள்ளார்.

வூ சூன்யூ

கோவிட்-19 எனும் கொடூர கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து இப்போதுதான் உலக நாடுகள் மீண்டு வருகிறது. இந்த நோயினால் பல்லாயிரக் கணக்கான மக்கள் உலகம் முழுவதும் உயிரிழந்தனர்.

கொரோனா ஊரடங்கு நடவடிக்கைக்கு வித்திட்ட சீன மருத்துவ நிபுணர் திடீர் மரணம்! | Chinese Virus Expert Wu Zunyou Dies At 60

வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள அனைத்து நாடுகளும் கையாண்ட ஒரு யுக்தி என்றால் அது ஊரடங்குதான். அந்த வகையில் சீனாவின் மூத்த தொற்றுநோயியல் நிபுணராக இருந்தவர் வூ சூன்யூ.

மரணம்

இவர் சீனாவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் தலைமை தொற்றுநோய் நிபுணராக இருந்தார்.

கொரோனா ஊரடங்கு நடவடிக்கைக்கு வித்திட்ட சீன மருத்துவ நிபுணர் திடீர் மரணம்! | Chinese Virus Expert Wu Zunyou Dies At 60

சீனாவில், கொரோனா தொற்று பரவலைத் தடுக்க நகரங்களை பூட்டி கோடிக்கணக்கான மக்களை வீடுகளுக்குள் அடைத்து வைக்கும் கடும் ஊரடங்கு நடவடிக்கைக்கு வித்திட்டவர் இவர் ஆவார். இந்நிலையில் நேற்று வூ சூன்யூ தனது 60 வயதில் மரணமடைந்துள்ளார். அவரின் இறப்பிற்கான காரணம் குறித்து தெரிவிக்கப்படவில்லை.