சீனாவில் தொடரும் கனமழை.. உடையும் நிலையில் அணைகள்.. சர்வதேச அளவில் பொருளாதாரம் பாதிக்குமா?

china emergency dam
By Irumporai Jul 23, 2021 12:18 PM GMT
Irumporai

Irumporai

in சீனா
Report

சீனாவில் கடந்த ஒரு சில நாட்களாகவே சீனாவில் பல்வேறு பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது.

கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் கனமழை பெய்து வருவதால் சீனாவின் மத்திய ஹெனான் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

ஹெனான் மாகாணத்தில் கனமழை இன்னும் தொடரது கொண்டே தான் இருக்கிறது.

இந்த வெள்ளத்தால் சுமார் 30 லட்சம் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆபத்தான பகுதிகளில் வசித்த சுமார் ஒரு லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இந்த வெள்ளத்தால் குறைந்தபட்சம் 33 பேர் உயிரிழந்துள்ளனர். கனமழை மேலும் சில நாட்கள் தொடரும் என்பதால் உயிரிழப்புகள் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

மேலும், நதிகளில் அபாய அளவில் நீர் மட்டம் உயர்ந்துள்ளது இதனால் சில அணைகள் உடையும் அபாயத்தில் உள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

சீனாவின் ஹெனான் நகரில் அணை உடைப்பு ஏற்பட்டால், இதனால் ஏற்படும் பொருளாதார பாதிப்பு சர்வதேச அளவில் எதிரொலிக்கும். ஏனென்றால், ஹெனனன் மாகாணத்தில் பல சர்வதேச நிறுவனங்களின் தொழிற்சாலைகள் அமைந்துள்ளன.

இதனால் சர்வதேச அளவில் மோசமான பொருளாதார விளைவுகளை ஏற்படும் என ஆய்வாளார்கள் அஞ்சுகின்றனர்.

சீனாவில் மொத்தம் 98,000 அணைகள் இருக்கின்றன இவை பெரும்பாலும் மின்சார உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த அணைகள் பெரும்பாலானவை 40 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானவை என்பதால் கனமழையினை தாங்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.