''மக்களே நான் இருக்கேன் நான் தொலைந்து போகல'' : வீடியோ காலில் வந்த வீராங்கனை விலகிய மர்மம்

Peng Shuai China tennis
By Irumporai Nov 22, 2021 05:21 AM GMT
Report

சீனாவில் பிரபல டென்னிஸ் வீராங்கனையான பெங், ஒரு பாலியல் புகாரால் காணாமல் போனதாக தகவல் பரவியது. அதற்கு ஏற்ப அவரும் யார் கண்ணிலேயும் சிக்கவில்லை. 

35 வயதான பெங் ஷூவாய் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு சமூக வலைதளப் பக்கமான வெய்போவில் சீனாவின் அதிகாரமிக்க தலைவர்களில் ஒருவரான ஜாங் கயோலி மீது பாலியல் குற்றச்சாட்டுகளை பதிவிட்டார்.

அதில், ஜாங்கயோலி 2012ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை தன்னை கொடுமைப்படுத்தி, சித்திரவதை செய்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் என்று பதிவிட்டுள்ளார். அவர் பதிவிட்ட சில மணிநேரங்களிலே அந்த பதிவு இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டது. ஆனால், அவரின் ஸ்கிரீன்ஷாட்கள் உலகம் முழுவதும் சமூக வலைத்தளங்களில் வைரலாகின.

குறிப்பாக இந்த குற்றச்சாட்டை வெளியிட்ட நாள் முதல் பெங் சூவாய் மாயமானார். இதன் பின்னணியில் அதிபர் ஜின்பிங் தலைமையிலான அரசுக்கு பங்கு இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்தது.

இந்த விவகாரம் சர்வதேச அளவில்  சர்ச்சையாக பெங் சூவாயின் ர் எங்கிருக்கிறார் என்பது குறித்து உண்மையான ஆதாரங்களை வழங்குமாறு, ஐ.நா.வும், அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளும் சீனாவை வலியுறுத்தியுள்ளன.

இந்த நிலையில் தற்போது இந்த விவகாரத்திற்கு  ஒலிம்பிக் இயக்குநர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இது குறித்து தகவல் வெளியிட்டுள்ள சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி, சீனாவின் டென்னிஸ் வீராங்கனை பெங் பத்திரமாக இருக்கிறார்.

அவர் ஒலிம்பிக் இயக்குநருடன் வீடியோ காலில் பேசினார். அப்போது பேசிய வீராங்கனை, தான் பத்திரமாக இருப்பதாகவும், பீஜீங்கில் உள்ள தன்னுடைய வீட்டில் தங்கியுள்ளதாகவும் கூறினார் என குறிபிடப்பட்டுள்ளது. இதனையடுத்து வீராங்கனையை சுற்றிய மர்மம் விலகியதாக பலரும் பதிவிட்டு வருகின்றனர்