சீனா உளவுக் கப்பலால் இந்தியாவிற்கு ஆபத்து - வைகோ

Vaiko Sri Lanka Government Of India
By Thahir Aug 03, 2022 10:49 AM GMT
Report

சீனா உளவுக் கப்பலால் இந்தியாவிற்கு ஆபத்து இருப்பதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

சீனாவின் உளவுக் கப்பல் 

நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த மழைக்கால கூட்டத்தொடரில் ஜிஎஸ்டி வரி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், அக்னிபாத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து எதிர்கட்சிகளின் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று மாநிலங்களவையில் பேசிய வைகோ சீன உளவுக் கப்பலுக்கு குறித்து பேசினார். அப்போது சீனாவுக்கு சொந்தமான யுவான் வாங்-5 என்ற உளவுக் கப்பல் இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஒரு வாரமாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

Vaiko

அந்நாட்டின் உளவுக்கப்பலால் அனைத்தையும் செயற்கைக்கோள் உதவியுடன் உளவு பார்க்கும் திறன் கொண்டது என்றும் சீனா உளவுக் கப்பலால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் உள்ளது.

வைகோ கோரிக்கை 

ஆகையால் சீன உளவுக் கப்பலை அனுமதிக்கக்கூடாது என்று இலங்கை அரசை இந்திய அரசு எச்சரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

சீனா கப்பலின் நடவடிக்கைகளை கண்காணிக்க கடற்படையினர், கடலோர பாதுகாப்பு படையினர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

சீனா கப்பலை இலங்கை அரசு அனுமதிக்காமல் இருக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.