உளவு பார்க்க வந்த சீனா கப்பல் - இந்திய பெருங்கடலில் நோட்டம் போடும் சீனா ரேடார்கள்
China
India
By Thahir
இந்தியப் பெருங்கடலில் சுற்றி திரியும் சீன உளவு கப்பல் “யுவான் வாங் 5” கண்டுபிடிக்கப்பட்டது.'
இந்திய பெருங்கடலில் சீனா உளவு கப்பல்
யுவான் வாங் 5 எனும் சீன உளவு கப்பல் பல்வேறு ஏவுகணைகள் மற்றும் கண்காணிப்பு சாதனங்களுடன் பொருத்தப்பட்டு இந்தியப் பெருங்கடல் பகுதிக்குள் நுழைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கப்பலானது இந்தியாவின் வங்காள விரிகுடாவில் நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணையை ஏவுவதற்கான சோதனைக்கான திட்டத்திற்கு முன்னதாக இந்திய பெருங்கடலில் நுழைந்தது.

இந்தக் கப்பல் கடைசியாக இந்தோனேசியாவின் சுந்தா ஜலசந்தியில் காணப்பட்டதாக கூறப்படுகிறது. சீன ஏவுகணை மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்புகளை கொண்ட யுவான் வாங் 5 கப்பலை இந்திய கடற்படை தீவிரமாக கண்காணித்து வருகிறது.