சீனாவால் 700 கோடி மக்களுக்கு பேராபத்து... - சீன ராக்கெட்டின் பாகங்கள் இன்று பூமியில் விழ வாய்ப்பு.. - விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்
சீனாவில் விண்ணில் ஏவப்பட்ட சீன ராக்கெட்டின் பாகங்கள் இன்று பூமியில் விழ வாய்ப்பு உள்ளது என்றும், இதனால் பேராபத்து ஏற்பட உள்ளதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளனர்.
விண்ணில் அனுப்பிய ராக்கெட்
கடந்த அக். 31ம் தேதி டியாங்காங் விண்வெளி நிலையத்தின் 3வது லாங் மார்ச் 5பி ஹெவி-லிஃப்ட் என்ற ராக்கெட்டை சீனாவின் மனித விண்வெளி நிறுவனம் (CSMA)விண்ணில் ஏவியது. அதில், சீனாவின் கட்டுமான பணியில் உள்ள டியான்காங் விண்வெளி நிலையத்திற்கு தேவையான மெங்சியான் என்ற உபகரணங்களின் தொகுதி புவி வட்டபாதைக்கு அனுப்பப்பட்டது.
பூமிக்கு பேராபத்து
இதன்பின்னர், அந்த ராக்கெட் இன்று பூமியை நோக்கி விழுகிறது. இந்த லாங் மார்ச் 5பி என்ற ராக்கெட்டானது பூமியின் எந்த பகுதியில் சரியாக விழும் என்ற விவரங்களை சீனா உறுதி செய்யவில்லை. இந்த ராக்கெட் மீண்டும் பூமிக்கு திரும்பும்போது, வளிமண்டலத்தில் எரிந்து சாம்பலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லாங் மார்ச் 5பி ராக்கெட்டானது சுமார் 108 அடி (33 மீட்டர்) நீளமும் 48,500 பவுண்டுகள் (22 ஆயிரம் கிலோ) எடையும் கொண்டது. இதனால், ராக்கெட்டிலிருந்து பெரிய பாகம் வளிமண்டலத்தில் முழுவதும் எரியாமல் பூமியில் எங்காவது விழ வாய்ப்புகள் உள்ளது.
ராக்கெட்டின் 10% முதல் 40% வரை பூமியை தாக்கும் என்று விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்து உள்ளனர்.

இது குறித்து, விண்வெளி கழகத்தின் தலைமை பொறியியலாளர் அலுவலகத்தின் ஆலோசகர் டெட் மியூல்ஹாப்ட் கூறியதாவது -
ராக்கெட் இன்று பூமியை நோக்கி விழுந்தால் 88 சதவீத உலக மக்களின் வாழ்க்கையில் பேராபத்து ஏற்படும். அதாவது, 700 கோடி மக்களுக்கு பேராபத்தில் உள்ளனர். இதற்கு முன், சீன ராக்கெட்டின் மீதமுள்ள பாகங்கள் மலேசியா, இந்தோனேசியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன என்றார்.
உலக நாடுகள் கண்டனம்
ஆனால், இன்று ராக்கெட் எந்த பகுதியில் பூமியில் விழும் என்பது பற்றிய சரியான தகவல்களை சீனா தெரிவிக்கவில்லை. சீனாவின் இச்செயலுக்கு உலக நாடுகள் கண்டனங்களை தெரிவித்துள்ளன.
Chinese Space Junk Falling To Earth On Saturday, 11 Thai Provinces At Risk https://t.co/gbTQHvYWvP#Thailand #WhatHappensInThailand #news #ThailandNews #Chinese #space #junk pic.twitter.com/0DxmCXVzc6
— ASEAN NOW Thailand, formerly Thaivisa.com (@ASEANNOWTH) November 3, 2022
Move to beautiful Nova Scotia, safe from Chinese space junk! ;-) pic.twitter.com/hiYo1CK6S6
— Marco Niese (@marconiese) November 3, 2022
Andy Vermaut shares:Chinese Space Junk Likely To Come Crashing To Earth On Friday: A massive Chinese rocket booster is headed for an uncontrolled fall through the atmosphere Friday, sparking concerns that pieces of the giant vehicle could… https://t.co/4WzD0fbwlk Thank you. pic.twitter.com/SVUkOOiibI
— Andy Vermaut (@AndyVermaut) November 4, 2022