சீனாவால் பூமிக்கு வந்த பேராபத்து... - சீன ராக்கெட்டின் பாகங்கள் கடலில் விழுந்தது - நிம்மதியடைந்த விஞ்ஞானிகள்...!

China
By Nandhini Nov 05, 2022 09:24 PM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

சீன ராக்கெட்டின் பாகங்கள் பசிப்பிக் பெருங்கடலில் விழுந்ததால் சுமார் 700 கோடி மக்களின் உயிர் தப்பித்துள்ளதாக விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

சீனா விண்ணில் அனுப்பிய ராக்கெட்

கடந்த அக். 31ம் தேதி டியாங்காங் விண்வெளி நிலையத்தின் 3வது லாங் மார்ச் 5பி ஹெவி-லிஃப்ட் என்ற ராக்கெட்டை சீனாவின் மனித விண்வெளி நிறுவனம் (CSMA)விண்ணில் ஏவியது.

அதில், சீனாவின் கட்டுமான பணியில் உள்ள டியான்காங் விண்வெளி நிலையத்திற்கு தேவையான மெங்சியான் என்ற உபகரணங்களின் தொகுதி புவி வட்டபாதைக்கு அனுப்பப்பட்டது.

பூமிக்கு பேராபத்து

இதன்பின்னர், அந்த ராக்கெட் பூமியை நோக்கி விழ உள்ளதாக நேற்று விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல் தெரிவித்தனர்.

இந்த லாங் மார்ச் 5பி என்ற ராக்கெட்டானது பூமியின் எந்த பகுதியில் சரியாக விழும் என்ற விவரங்களை சீனா உறுதி செய்யவில்லை என்றும், இந்த ராக்கெட் மீண்டும் பூமிக்கு திரும்பும்போது, வளிமண்டலத்தில் எரிந்து சாம்பலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் தெரிவித்தனர்.

மேலும், லாங் மார்ச் 5பி ராக்கெட்டானது சுமார் 108 அடி (33 மீட்டர்) நீளமும் 48,500 பவுண்டுகள் (22 ஆயிரம் கிலோ) எடையும் கொண்டது. இதனால், ராக்கெட்டிலிருந்து பெரிய பாகம் வளிமண்டலத்தில் முழுவதும் எரியாமல் பூமியில் எங்காவது விழ வாய்ப்புகள் உள்ளது என்றும், ராக்கெட்டின் 10% முதல் 40% வரை பூமியை தாக்கும் என்று விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்தனர்.

chinese-rocket-space-junk

உலக நாடுகள் கண்டனம்

ஆனால், ராக்கெட் எந்த பகுதியில் பூமியில் விழும் என்பது பற்றிய சரியான தகவல்களை சீனா தெரிவிக்காததால், சீனாவின் இச்செயலுக்கு உலக நாடுகள் கண்டனங்களை தெரிவித்து வருகிறது.

ராக்கெட்டின் பாகங்கள் கடலில் விழுந்தது

இந்நிலையில், 23 டன் எடை கொண்ட சீனாவின் லாங் மார்க் - 5பி ராக்கெட்டின் பாகங்கள் பசிபிக் பெருங்கடலில் விழுந்துள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால், உலக மக்களும், விஞ்ஞானிகளும் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.