1 மனைவி, 4 காதலிகளுடன் வாழ்ந்த நபர் - 4 ஆண்டுகளுக்கு பின் தெரியவந்த அதிர்ச்சி!
நபர் ஒருவர் ஐந்து பெண்களை ஒரே நேரத்தில் ஏமாற்றி பண மோசடி செய்துள்ளார்.
பண மோசடி
சீனா, ஜிலின் மாகாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் தன்னை பணக்காரன் என்று கூறி வசித்து வந்துள்ளார். ஆனால், அவரது தந்தை கட்டுமானத் துறையிலும், தாயார் குளியல் இல்லத்தில் உதவியாளராகவும் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் ஒரு பெண்ணுடன் பழகி பணக்காரன் போல நடித்து, விலை உயர்ந்த பரிசுப் பொருட்களையும் கொடுத்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் கர்ப்பமான அந்த பெண், காதலனை திருமணம் செய்துகொண்டுள்ளார். பின், அந்த நபரின் உண்மையான பொருளாதார நிலை அவருக்கு தெரியவந்து வீட்டை விட்டு துரத்தியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அந்த நபர் ஆன்லைனில் ஒரு பெண்ணுடன் பழகி, அதே பணக்காரன் கதையை கூறியுள்ளார். இந்த பெண்ணிடம், வீட்டை சீரமைத்ததாக கூறி, ரூ.16.50 லட்சம் வாங்கியுள்ளார். திய காதலியை தன்னுடைய கர்ப்பிணி மனைவி இருக்கும் அதே குடியிருப்பில் தங்க வைத்துள்ளார்.
சிக்கிய நபர்
மேலும் அதே குடியிருப்பில் வசித்த இரண்டு பல்கலைக்கழக மாணவிகளையும், ஒரு செவிலியரையும் ஏமாற்றி பழகி வந்துள்ளார். அவர்களிடம் ரூ.1.7 லட்சம், ரூ.1.18 லட்சம், 94 ஆயிரம் என வசூல் செய்துள்ளார். அப்போது பெண் ஒருவர் தான் கொடுத்த பணத்தை ஒரு பெண் கேட்டபோது, போலி நோட்டுகளை கொடுத்துள்ளார்.
இதையறிந்த பெண் போலீஸில் புகாரளித்துள்ளார். அதன் அடிப்படையில் நடத்திய விசாரணையில், இவர் ஒரே குடியிருப்பில் ஒரு மனைவி மற்றும் நான்கு காதலிகளுடன் கடந்த நான்கு வருடங்களாக வாழ்ந்து வந்தது தெரியவந்தது.
தற்போது அந்த நபருக்கு நீதிமன்றம் 9.5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 14 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இழந்த பணத்தை திரும்பக் கொடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.