இந்தியாவை தாக்கினார்களா சீன ஹேக்கர்கள்? புதிய ஆய்வில் அதிர்ச்சி தகவல்
இந்தியாவின் மும்பை நகரில் கடந்த அக்டோபர் 13-ம் தேதி மிகப்பெரிய மின் தடை ஏற்பட்டது. இதனால் அங்கு நகரமே ஸ்தம்பித்து போனது. மின்சார ரயில்கள் நிறுத்தப்பட்டன, வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டது, மருத்துவமனைகள் கடும் அவதிக்கு உள்ளாகின. கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த நேரத்தில் ஏற்பட்ட இந்த மின் தடை பெரும் இன்னல்களை ஏற்படுத்தியது.
இதற்கான காரணம் என்னவென்பது பற்றி விசாரிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் Recorded Future என்கிற நிறுவனம் சீன ஹேக்கர்கள் தான் இந்திய செர்வர்களை ஹேக் செய்து இந்த மின் தடையை ஏற்படுத்தியுள்ளனர் என்கிற அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளது. சீன அரசு நிறுவனமான ரெட் எகோ தான் இதன் பின்னணியில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இந்திய - சீன எல்லையில் ஏற்பட்ட மோதலுக்கு பதிலடியாக சீனா இந்த சைபர் தாக்குதலை நிகழ்த்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. நாடுகளுக்கு இடையே ஆன போட்டி என்பது எல்லை யுத்தங்களை தாண்டி தற்போது சைபர் பரப்பில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் கோலோச்சி வந்த சைபர் துறையில் தற்போது சீனாவும் ஆதிக்கம் செலுத்த தொடங்கியுள்ளது.
இந்த அறிக்கை இந்திய அரசிடமும் சமர்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் அது மார்ச் மாதம் முடிவுக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்திய தன்னுடைய சைபர் பாதுகாப்பிலும் அதிகம் கவனம் செலுத்த வேண்டும் எனவும் பாதுகாப்பு துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.