24 ஆண்டு தேடல்.. 5 லட்சம் கிலோமீட்டர் பயணம்.. கடத்தப்பட்ட மகனை கண்டுபிடித்த பாசக்கார தந்தையின் கதை!
கண்டிப்பிலும் தண்டிப்பிலும் கொத்திடும் உன் முகம் ..காய்ச்சல் வந்து படுக்கையில் துடிப்பதும் உன் முகம் ,,,தந்தையின் அன்பு குறித்த நா.முத்துக்குமாரின் வரிகள்தான் இவை.
தந்தையின் பாசத்தை கூறும் இந்த வரிகள் போல சீனாவை சேர்ந்த தந்தை ஒருவர் 24 வருடங்களுக்கு முன்பு காணாமல் போன தன் மகனை தேடிக் கண்டுபிடித்துள்ளார்.
2 வயதில் காணமல் போன மகன்:
சீனாவில் கடந்த 1997-ம் ஆண்டு ஷாங்டாங் மாகாணத்தை சேர்ந்த குவோ கேங்டாங் என்பவரின் 2 வயது மகன் வீட்டுக்கு வெளியே விளையாடி கொண்டிருந்தபோது கடத்தல்காரர்கள் இருவர்கடத்தி சென்று விற்று விட்டனர்.
போலீசார் அந்த கடத்தல்காரர்களை கைது செய்த போதும் குவோ கேங்டாங்கின் மகனை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.
மகனை தேடி தந்தையின் தேடல்:
இந்த நிலையில் தனது மகனை தானே தேடி கண்டுபிடிக்க முடிவு செய்த குவோ கேங்டாங் தனது பணத்தை செலவு செய்து ஒரு மோட்டார் சைக்கிளை வாங்கி சீனாவின் ஒவ்வொரு மாகாணமாக சென்று தனது மகனை தேடினார்.
பிச்சை எடுத்து பயணம்:
சில வருடங்களில் தன் கையில் இருந்த மொத்த பணமும் தீர்ந்த நிலையில் பயணத்தை தொடர்வதற்காக பிச்சை எடுத்து பயணத்தை தொடர்ந்தார்.
இதில் பயணத்தின் போது பலமுறை விபத்துக்குள்ளாகி அவரது எலும்புகள் முறிந்தன. வழிப்பறி கொள்ளையர்களிடம் சிக்கி பணத்தையும் உடமைகளையும் இழந்தார்.

ஆனாலும் நம்பிக்கை இழக்காத குவோ கேங்டாங் கடத்தப்பட்ட தனது குழந்தையின்
படத்தை, பதாகையாக ஏந்திஅலைந்துள்ளார்.பாலங்களுக்கு அடியில் தூங்கி தன் வாழ்
நாளினை கழித்துள்ளார்.
தமது மகனைத் தேடும் முயற்சியின் போது காணாமல் போனவர்களை தேடுவதற்காக சீனாவில் உள்ள அமைப்புகளில் முக்கிய உறுப்பினராக சேர்ந்து கடத்தப்பட்ட பல குழந்தைகள் தங்களது பெற்றோரிடம் சேருவதற்கு இவர் உதவி செய்துள்ளார்.
படமாக வந்த வாழ்க்கை:
குவோ கேங்டாங்கின் குழந்தை கடத்தப்பட்டது மற்றும் அதை அவர் தேடி அலைவது ஆகிவற்றை அடிப்படையாகக் கொண்டு 2015ஆம் ஆண்டில் லாஸ்ட் அண்ட் லவ்' எனும் திரைப்படம் வெளியானது.
பாசம் வென்றது:
இந்த நிலையில் 24 ஆண்டுகளுக்கு பிறகு 2 வயதில் கடத்தப்பட்ட தனது மகனை கண்டுபிடித்து அவனுடன் இணைந்து விட்டார்.காவல்துறையினர் அளித்த தகவலில் குவோவுக்கு அவரது மகன் கிடைத்துள்ளார்.
டிஎன்ஏ பரிசோதனையின் மூலம் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர். 26 வயதாகும் அவரது மகன் ஒரு ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
மகனை சந்தித்த குவோ மற்றும் அவரது மனைவி ஆனந்த கண்ணீர் வடித்தனர். இருவரும் மகனை ஆரத்தழுவி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்

குவோ கேங்டாங்தனது மகனை தேடி 20 மாகாணங்களில் கிட்டத்தட்ட 5 லட்சம் கி.மீ. பயணம் செய்துள்ளார் குவோ கேங்டாங். இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பகிர்ந்துள்ள குவோ .
இந்த நாள் எனக்கு மிகவும் முக்கியமான நாள், என் மகன் எனக்கு கிடைத்துவிட்டான்.
என் மகனை தேடுவது நிறுத்த எனக்கு காரணம் எதுவும் இல்லை. எப்படி என் மகனை
தேடாமல் இருக்க முடியும். எனவே நான் தொடர்ந்து தேடி வந்தேன் என கூறினார்.
தகப்பனின் கண்ணீரை கண்டோரில்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை...
REUNITED: A father is reunited with his missing son after he was abducted from their home 24-years-ago. The father traveled across China on his motorcycle for decades searching for his child after he was kidnapped outside their home aged just two. https://t.co/2KybRyutwV pic.twitter.com/cp0CBZKa7B
— ABC News (@ABC) July 14, 2021
தற்போது 24 வருடங்களுக்கு பிறகு தந்தையும் மகனும் சந்தித்து கொண்ட இந்த
நிகழ்வினை இணைய வாசிகள் கொண்டாடி வருகின்றனர்.