Saturday, Jul 12, 2025

ஒருநாள் வாடகை ரூ.11,000; சொகுசு ஹோட்டலில் 229 நாட்களாக வாழும் குடும்பம் - என்ன காரணம்..?

China World
By Jiyath 2 years ago
Report

சீனாவை சேர்ந்த ஒரு குடும்பம் 229 நாட்களாக சொகுசு ஹோட்டலில் வாடகை கொடுத்து தங்கி வருகின்றனர்.

ஹோட்டலில் வாழ்க்கை

சீனாவை சேர்ந்த ஒரு குடும்பம் வீடுகட்டி வாழ வசதி இருந்தும் நான்யாங் நகரில் உள்ள ஒரு சொகுசு ஹோட்டலில் சூட் அறைகள் எடுத்து தங்கி வருகின்றனர்.

ஒருநாள் வாடகை ரூ.11,000; சொகுசு ஹோட்டலில் 229 நாட்களாக வாழும் குடும்பம் - என்ன காரணம்..? | Chinese Family Of 8 Makes A Hote Per Day

அந்த ஹோட்டலில் ஒருநாள் வாடகை 1000 யுவானாகும் (இந்திய மதிப்பில் ரூ.11,000). 8 பேர் கொண்ட அந்த குடும்பத்துக்கு மின்சாரம், தண்ணீர், பார்க்கிங்கிற்கு கூடுதல் கட்டணம் கிடையாதாம். மேலும், நீண்ட காலம் தங்குவதற்கு ஹோட்டல் நிர்வாகம் அவர்களுக்கு சில சிறப்பு சலுகைகளையும் வழங்கியுள்ளதாம்.

என்ன காரணம்?

இது குறித்த அந்த குடும்பத்தை சேர்ந்த மு யூ கூறுகையில் "நாங்கள் ஹோட்டலில் குடியேறி இன்றுடன் 229-வது நாள் ஆகிறது. அறைக்கு ஒரு நாளைக்கு 1000 யுவான் செலவாகும்.

ஒருநாள் வாடகை ரூ.11,000; சொகுசு ஹோட்டலில் 229 நாட்களாக வாழும் குடும்பம் - என்ன காரணம்..? | Chinese Family Of 8 Makes A Hote Per Day

எங்கள் குடும்பம் இங்கு வசதியாக மகிழ்ச்சியாகவும் வாழ்கிறது. எனவே எங்கள் வாழ்நாள் முழுவதும் இங்கேயே வாழத் திட்டமிட்டுள்ளோம்" என்றார்.

மேலும், தனது குடும்பத்திற்கு 6 சொத்துக்கள் மற்றும் நிதி வசதி போதுமானதாக இருப்பதாகவும், இந்த வாழ்க்கை முறை பணத்தை சேமிக்க உதவுவதாகவும் அவர் கூறியுள்ளார்.