டிரோனில் வந்த சீனா துப்பாக்கிகள் - எல்லையில் சுட்டு வீழ்த்திய இந்திய பாதுகாப்பு படை வீரர்கள்

Pakistan China India
By Thahir Jan 18, 2023 06:03 AM GMT
Report

 இந்தியாவுக்குள் கடத்தப்படவிருந்த 4 சீன துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுட்டு வீழ்த்தப்பட ட்ரோன் 

கடந்த சில நாள்களாகவே இந்தியாவின் எல்லை பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் , பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் அருகேடிரோன் மூலம் இந்தியாவுக்குள் கடத்தப்படவிருந்த 4 சீன துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பாகிஸ்தானில் இருந்து எல்லை வழியாக வந்த ட்ரோனை உஞ்சா தக்கலாவில் எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தி கைப்பற்றினர். ட்ரோனில் இருந்து வந்த 4 சீன தயாரிப்பு துப்பாக்கிகள் மற்றும் குண்டுகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

டிரோனில் வந்த சீனா துப்பாக்கிகள் - எல்லையில் சுட்டு வீழ்த்திய இந்திய பாதுகாப்பு படை வீரர்கள் | Chinese Drones Shot Down Indian Security Forces

இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் இந்திய எல்லையில் பாதுகாப்பு படையினர் ட்ரோன் கண்காணிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.