ஒரு வருடத்தில் குழந்தை பிறக்கணும் : புதுமண தம்பதிகளுக்கு தொல்லை கொடுக்கும் சீன அரசு , காரணம் என்ன ?

Xi Jinping China
By Irumporai Oct 28, 2022 05:34 PM GMT
Irumporai

Irumporai

in சீனா
Report

மக்கள் தொகையினை குறைக்க கெடுபிடியான சட்டங்களை கொண்டு வந்த சீன அரசு தற்போது பிறப்பு விகிதம் குறைந்துள்ளதால் சட்டத்தை தளர்த்தியுள்ளது.

 குறைந்த பிறப்பு விகிதம்

இந்த நிலையில் சீனாவில் மக்கள்தொகை குறைந்து வருவதை அந்நாட்டு அரசு ஒப்புக்கொண்டுள்ளது. இந்த நிலையில், புதிதாக திருமணமானவர்களின் விவரங்களை சேகரித்து அந்த தம்பதிகளுக்கு குழந்தை பிறந்துள்ளதா? என்பதை அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது.

ஒரு வருடத்தில் குழந்தை பெறணும்

 கடந்த சில நாட்களுக்கு முன்பு கம்யூனிஸ்ட் கட்சியின் மிக முக்கியமான கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவரும், அந்நாட்டின் அதிபருமான ஜி ஜின்பிங் சீனாவில் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கவும், நாட்டின் மக்கள்தொகை மேம்பாட்டு திட்டத்தை மேம்படுத்துவதற்கும் நாடு ஒரு கொள்கையை நிறுவும் என கூறியதாக கூறப்படுகிறது

ஒரு வருடத்தில் குழந்தை பிறக்கணும் : புதுமண தம்பதிகளுக்கு தொல்லை கொடுக்கும் சீன அரசு , காரணம் என்ன ? | Chinese Authoritiesnewlyweds Whens The Baby

வலைதள பதிவால் சர்ச்சை 

இந்த நிலையில் புதிதாக திருமணமான ஒரு பெண் இதுகுறித்த தனது அனுபவத்தை ஆன்லைனில் பகிர்ந்து கொண்டார். அதில், திருமணமான பின், நான் கர்ப்பமாக இருக்கிறேனா? என்று உள்ளூர் அதிகாரிகள் என்னிடம் தொடர்புகொண்டு விவரம் கேட்கிறார்கள் என்று தெரிவித்தார்.

இந்த தகவலை அவர் பகிர்ந்து கொண்ட சில நிமிடங்களிலேயே, பலரும் தாங்கள் இதுபோன்ற அணுகுமுறையால் பாதிக்கப்பட்டுள்ளதாக இணையத்தில் தெரிவித்து வருகின்றனர்.