விண்வெளியில் கீரை, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளை விளைவித்த சீனா - ஹே எப்புட்றா..?

China World
By Jiyath Oct 24, 2023 07:31 AM GMT
Jiyath

Jiyath

in சீனா
Report

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் கீரை, தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளை சீன விண்வெளி வீரர்கள் விளைவித்துள்ளனர். 

சர்வதேச விண்வெளி மையம்

அமெரிக்க, ரஷியா, ஐரோப்பா, ஜப்பான், கனடா நாடுகள் இனைந்து விண்வெளியில், சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் அமைத்துள்ளது. இந்த விண்வெளி மையம் பூமியிலிருந்து சுமார் 400 கி.மீ தொலைவில் லோவர் புவி சுற்றுவட்டபாதையில் அமைக்கப்பட்டுள்ளது.

விண்வெளியில் கீரை, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளை விளைவித்த சீனா - ஹே எப்புட்றா..? | Chinese Astronauts Grow Lettuce Tomatoes In Space

இதில் சீனா தனக்கென சொந்தமாக டியாங்காங் என்ற விண்வெளி ஆய்வு மையத்தை உருவாக்கி அங்கு பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த மே மாதம் ஷென்சோ-16 என்ற விண்கலத்தில் ஜிங்ஹைபெங், ஜூ யாங்சு மற்றும் சீனா ஏரோனாட்டிக்ஸ் பல்கலைகழகத்தின் பேராசிரியர் குய் ஹைச்சாலோ ஆகிய விண்வெளி வீரர்களான 3 பேர், சீன விண்வெளி ஆய்வு மையத்துக்கு சென்றனர். அங்கு அவர்கள் கீரை, சின்ன வெங்காயம், செர்ரி, தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை பயிரிட்டனர்.

விண்வெளியில் காய்கறிகள்

பூமியில் தேவையான சூரிய வெளிச்சம், தண்ணீர் இருப்பதால் செடிகள் எளிதில் வளரும். ஆனால் விண்வெளியில் இந்த சாத்தியக்கூறுகள் இல்லாததால் சீனா அதற்காக சிறப்பு ஏற்பாடுகளை செய்தனர். அதாவது செடிகளை பயிரிடுவதற்கான சிறப்பு சாதனத்தை உருவாக்கியிருந்தனர்.

விண்வெளியில் கீரை, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளை விளைவித்த சீனா - ஹே எப்புட்றா..? | Chinese Astronauts Grow Lettuce Tomatoes In Space

தாவர வளர்ச்சிக்கு தேவையான வெப்பநிலை, ஈரப்பதம், ஆக்சிஜன், கார்பன் டை-ஆக்சைடு உள்ளிட்டவை சரியான அளவில் கிடைக்கும் வகையில் அது உருவாக்கப்பட்டிருந்தது. அதில் சீன வீரர்கள் பயிரிட்ட கீரை, செர்ரி, தக்காளி மற்றும் சின்ன வெங்காயம் ஆகியவை நன்கு வளர்ந்ததை அடுத்து, அவற்றை அவர்கள் அறுவடை செய்துள்ளனர்.

இந்நிலையில் விண்வெளியில் ஆய்வை முடித்துவிட்டு இந்த குழுவினர் அடுத்த மாதம் பூமிக்கு திரும்பவுள்ளனர். முன்னதாக விண்வெளியில் காய்கறி செடிகளை வளர்த்து அறுவடை செய்து அமெரிக்கா, ரஷியா, ஐரோப்பிய விண்வெளி வீரர்கள் சாதனை படுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.