விண்வெளியில் தனியாக விண்வெளி மையத்தை கட்டமைக்கும் சீனா - அலறும் உலக நாடுகள்!
சீன வீரர்கள் விண்வெளியில் 7 மணி நேரம் ஆய்வுப் பணி மேற்க்கொண்டனர்.
விண்வெளி
விண்வெளியில் அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் சர்வதேச விண்வெளி மையம் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் அதில் இடம்பெறாத சீனா தனியாக விண்வெளி மையத்தை கட்டமைத்துள்ளது.
தியாங்காங் என பெயரிடப்பட்டுள்ள இந்த விண்வெளி மையத்தில் மூன்று சீன வீரர்கள் தங்கி ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில், காய் (Cai) மற்றும் சாங் (Song) என்ற இரண்டு விண்வெளி வீரர்கள் விண்வெளி நிலையத்தில் இருந்து வெளியே வந்து சிறிது தூரம் நடந்தனர்.
சீன வீரர்கள்
அப்போது, விண்வெளி குப்பைக் கவசம் மற்றும் வெளிப்புற உதவி சாதனங்களை விண்வெளி நிலையத்தின் வெளிப்படுக்கத்தில் நிறுவினர். அதன்பின் விண்வெளி நிலையத்திற்கு திரும்பினர்.
மேலும் கடந்த அக்டோபர் மாதம் விண்வெளி நிலையத்திற்குச் சென்ற இந்த குழுவினர் ஆய்வு பணியை முடித்து ஏப்ரல் அல்லது மே மாத தொடக்கத்தில் பூமிக்கு திரும்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.