AI செயலி Deepseek-க்கு தடை - என்ன காரணம் தெரியுமா?
சீன AI செயலி Deepseek-க்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Deepseek
சீன AI செயலியான டீப்சீக் உலகம் முழுவதும் பிரபலமடைந்து வருகிறது. நொடிகளில் ஆயிரம் தரவுகளை கொட்டிக் கொடுக்கிறது.
இந்நிலையில், deepseek செயலி பதிவிறக்கத்துக்கு தென்கொரியாவில் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்கொரிய சட்டதிட்டங்கள் மற்றும் தனிநபர் தரவுகள் பாதுகாப்பு ஆணையத்துடன் deepseek அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
எனவே, இதில் முடிவுகள் எடுக்கப்படும் வரை ஆப்பிள் ஆப்ஸ்டோர் மற்றும் பிளேஸ்டோரில் இருந்து டீப் சீக் செயலி நீக்கப்பட்டுள்ளது.
தென்கொரியாவில் தடை
ஏற்கனவே பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வரும் பயனர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்று அந்நாட்டு அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முக்கிய ரகசிய ஆவணங்களை உளவு பார்க்கக்கூடும் என்ற அச்சத்தால் தென்கொரிய அரசு முகமைகளில், டீப்சீக் பயன்படுத்தக் கூடாது என்று அதிகாரிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.