தற்கொலைக்கு முயன்ற நபரை காப்பாற்றிய ஏ.ஆர். ரஹ்மான்
மலேசியாவில் தற்கொலைக்கு முயன்ற நபர் "சின்னஞ்சிறு ரகசியமே" என்ற பாடல் கேட்டவுடன் தனது முடிவை மாற்றிக்கொண்டேன் என்ற டிவிட்டர் பதிவு இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
ஏ. ஆர். ரஹ்மான்
இசைப்புயல் என்று அழைக்கப்படும் ஏ.ஆர். ரஹ்மான் இதுவரை தமிழ்,ஹிந்தி,தெலுங்கு,மலையாளம் என 145 படங்களுக்கும் மேலாக இசையமைத்திருக்கிறார். அதைவிட மேலாக ஹாலிவுட் படங்களுக்கும் இசையமைத்து ஆஸ்கார் விருதையும் வென்றுள்ளார்.
சமீபத்தில் இவர் இசையமைத்து வெளியான மாமன்னன் படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது .
தற்கொலைக்கு முயன்றவரை காப்பாற்றிய "சின்னஞ்சிறு ரகசியமே"
இந்நிலையில் சமீபத்தில் செல்வக்குமார் என்ற மலேசிய இசையமைப்பாளர் ஒருவரின் ட்வீட் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. அதில் "2015-ம் ஆண்டு ஏப்ரல் 4-ம் தேதி நள்ளிரவு நான் தற்கொலைக்கு முயன்றேன். அப்போது திடீரென்று என் நண்பரிடம் இருந்து எனக்கு மெசேஜ் வந்தது.
Dear guru @arrahman sir.
— Selvakumar.D (@SelvakumarD93) July 5, 2023
It was April 4th 2015 midnight, almost an inch away from taking off my life away from this earth. I got a message that saying “Anne, you should listen this album by Ar Rahman sir. You gonna love it”. #continuebelow pic.twitter.com/426i358Oum
அதில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இந்த பாடலை கேட்க வேண்டும். கண்டிப்பாக உனக்கு பிடிக்கும் என தெரிவித்திருந்தார். அந்த பாடல் ஓகே கண்மணி படத்தில் இடம் பெற்ற “சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே” பாடல். அதனைக் கேட்ட பிறகு என் மனம் எப்படி மாறியது என்று தெரியவில்லை.
வீட்டிற்குச் சென்று எனது ஹெட்ஃபோன்கள் மூலம் கிட்டத்தட்ட 48 மணிநேரம் அந்த பாடலை திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டு என் அறையை பூட்டிக் கொண்டேன். விட்டுக்கொடுக்காத வாழ்க்கை எவ்வளவு மதிப்புள்ளது என்பதை அப்போதுதான் உணர்ந்தேன்.
இந்த பாடல் என் உயிரைக் காப்பாற்றியது. என் வாழ்க்கையில் என்னை காயப்படுத்த எத்தனை முட்கள் காத்திருந்தாலும் நான் இன்னும் நடந்து கொண்டே இருப்பேன்’ என செல்வகுமார் ட்வீட் செய்திருந்தார்.
இந்த பதிவு இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.