சுருட்டு பிடித்த போதையில் குட்டித் தூக்கம் போட்ட திருடன் - தட்டி தூக்கிய போலீஸ்!
திருட வந்த இடத்தில் போதையில் படுத்து உறங்கிய திருடனை போலீசார் கைது செய்துள்ளனர்.
உறங்கிய திருடன்
சீனாவில் உள்ள யுனான் மாகாணத்தில் வசித்து வரும் நபர் ஒருவர் இரவில் தனது வீட்டில் உறங்கியுள்ளார். பின்னர் காலையில் எழுந்தவுடன் வீட்டில் உள்ள மற்றோரு அறைக்கு சென்றதும் அதிர்ச்சியடைந்துள்ளார்.
அங்கு திருடன் ஒருவன் சுருட்டு பிடித்துவிட்டு போதையில் உறங்கிக்கொண்டிருந்துள்ளார். உடனடியாக இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு விரைந்து வாத போலீசார் அந்த திருடனை கைது செய்தனர்.
கைது செய்த போலீஸ்
இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், அந்த நபர் பல திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 'யாங்' என்பது தெரியவந்தது. அவர்மீது பல்வேறு வழக்குகள் இருந்ததால் 2022ம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
பின்னர் சமீபத்தில்தான் பிணையில் வெளியே வந்துள்ளார். இதற்கிடையில் யாங் மீண்டும் திருட்டில் இறங்கியுள்ளார். வந்த இடத்தில் சுருட்டு பிடித்த போதையில் குட்டித் தூக்கம் போட்ட பலே திருடனை போலீசார் சிறையில் அடைத்தனர்.