மீண்டும் சீனாவில் தலை தூக்கிய கொரோனா - டிஸ்னிலேண்ட் பூங்கா மூடல்: அடுத்து இந்தியாவுக்குள் நுழையுமா?

China closed Shanghai Shanghai Disneyland Park
By Anupriyamkumaresan Nov 01, 2021 12:28 PM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in சீனா
Report

ஷாங்காய் டிஸ்னிலேண்ட் பூங்காவிற்கு வந்த பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அப்பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

உலகில் முதன் முதலாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டதாக கருதப்படும் சீனாவில், பெரும் முயற்சிக்குப் பிறகு கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில், சமீப நாட்களாக சீனாவில் மீண்டும் கொரோனா தலைக்காட்டத் துவங்கியுள்ளது. இதையடுத்து கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்ட பகுதிகளில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு வருகிறது.

மீண்டும் சீனாவில் தலை தூக்கிய கொரோனா - டிஸ்னிலேண்ட் பூங்கா மூடல்: அடுத்து இந்தியாவுக்குள் நுழையுமா? | China Xanghoi Disneyland Covid Positive Closed

இந்நிலையில் சீனாவில் அமைந்துள்ள ஷாங்காய் டிஸ்னிலேண்ட் பொழுதுபோக்குப் பூங்காவிற்கு வந்த பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

இதையடுத்து டிஸ்னிலேண்ட் பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. ஷாங்காய் டிஸ்னிலேண்ட் பூங்கா உலகின் மிகப்பெரிய பொழுதுபோக்கு பூங்காக்களில் ஒன்று என்பதால், அங்கு கொரோனா பரவல் தடுப்புப் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட பெண் வந்த நாளில் பூங்காவிற்குள் இருந்த சுற்றுலாப் பயணிகள், பூங்கா ஊழியர்கள் உள்ளிட்டோர் சுகாதாரத்துறையினரின் கண்காணிப்புப் வளையத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

மீண்டும் சீனாவில் தலை தூக்கிய கொரோனா - டிஸ்னிலேண்ட் பூங்கா மூடல்: அடுத்து இந்தியாவுக்குள் நுழையுமா? | China Xanghoi Disneyland Covid Positive Closed

சீனாவின் பெய்ஜிங் நகரில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் குளிர்கால ஒலிம்பிக் தொடங்க உள்ள நிலையில், இதற்கான முன்னேற்பாடு இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது.

இத்தொடர் துவங்குவதற்கு முன்னர் சீனாவில் கொரோனா நோய்த்தொற்றை பெருமளவில் ஒழித்திருக்க வேண்டும் என்று திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது நாட்டில் ஆங்காங்கே கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவது அரசுக்கு பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளது.