சீனாவுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் - கனடா பிரதமர்
கொரோனா வைரஸ் விவகாரத்தில் வெளிப்படைத்தன்மை உடன் நடந்து கொள்ளவில்லை என உலக நாடுகள் சீனா மீது குற்றம்சுமத்தி வருகின்றன.
அதே சமயம் சீனாவின் மோதல் போக்கிற்கு பல நாடுகளும் அணி திரண்டு வருகின்றன. கனடாவைச் சேர்ந்த அதிகாரிகள் இருவரை சீனா வேவு பார்த்த குற்றத்திற்காக கைது செய்து சிறை வைத்துள்ளது. இதனால் சீனா - கனடா இடையே உறவுகள் தொடர்ந்து மோசமடைந்து வந்தது.
கனடா அதிகாரிகளை விடுதலை செய்ய வேண்டும் என அந்நாடு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் சீனாவின் ஆதிக்க போக்கிற்கு எதிராக அனைத்து நாடுகளும் ஒன்றிணைய வேண்டும் என கனடா பிரதமர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், “இன்று கனடாவைச் சேர்ந்தவர்களை சிறை வைத்துள்ள சீனா நாளை எந்த நாட்டைச் சேர்ந்தவர்களை சிறை வைக்கும் என்று தெரியாது” என்று தெரிவித்துள்ளார்.