திருமணம் செய்ய இளைஞர்களிடம் வரதட்சனை கேட்டும் இளம் பெண்கள் - குறையும் மக்கள் தொகையால் அரசு கவலை

Government of China China Marriage
By Thahir Mar 06, 2023 03:23 AM GMT
Report

சீனாவில் இளம்பெண்கள் ஆண்களை திருமணம் செய்து கொள்ள அதிகளவில் வரதட்சனை கேட்பதால் பெரும்பாலான இளைஞர்கள் சிங்கிளாக இருந்து வருகின்றனர்.

திருமணத்தை புறக்கணிக்கும் இளைஞர்கள் 

சீனாவில் மக்கள் தொகை பிரச்சனைக்கு மத்தியில் திருமணங்கள் என்பது குறைந்து வருகிறது. மேலும் பிறப்பு விகிதமும் குறைந்து வருவதால் நாட்டின் மக்கள் தொகை குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் பெண்கள் அதிகளவில் வரதட்சணை கேட்பதால் இளைஞர்கள் திருமணம் செய்து கொள்வதில் ஆர்வம் காட்டாமல் இருந்து வருகின்றனர்.

china-women-ask-young-men-for-dowry-to-get-married

சீனாவில் உள்ள முக்கிய நகரங்களில் 25 - 30 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் திருமணத்திற்கு ஆர்வம் காட்டாமல் சிங்கிளாக இருந்து வருவதால் சிங்கிள்கள் எண்ணிக்கை என்பது அதிகரித்து வருகிறது.

தீவிர முயற்சியில் அரசு 

சீனாவில் உள்ள ஜியாங்சி மாகாண எழுத்தாளர் ஃபெடரிகோ கியூலியானி எழுதியுள்ள சமூக வலைதள பதிவில், ‘அதிகப்படியான வரதட்சணை கேட்கும் பழக்கத்தை ஒழிக்கவும், ஆடம்பர திருமணத்தை தவிர்க்கவும் சீன அரசு முயற்சிகளை தொடங்கியுள்ளது.

இந்த நடைமுறையை பின்பற்றுமாறு இளம் பெண்களை அரசு கேட்டுக் கொள்கிறது. பழங்கால வழக்கத்தை பின்பற்ற வேண்டாம் என்று அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றன.

அதனால் 20 முதல் 30 வயதுடைய இளம் பெண்கள் தங்கள் திருமணத்தின் போது கார்கள், வீடுகள், பணத்தைக் கேட்க மாட்டோம் என்று சபதம் எடுத்து வருகின்றனர். இவ்வாறு செய்வதால், குழந்தை பிறப்பு விகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.