தங்கையை திருமணம் செய்த நபர் - ட்விஸ்ட் கொடுத்த தாய்!

China Marriage
By Sumathi Aug 21, 2025 01:12 PM GMT
Report

திருமணம் செய்த பெண் இறுதியில் தங்கை என தெரியவந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

தொலைந்த மகள்

சீனாவின் சுஜோ என்ற இடத்தில் திருமணம் ஒன்று நடைபெறவிருந்தது. அப்போது மணமகனின் தாய் மணப்பெண்ணிடம் ஒரு விஷயத்தைக் கவனித்துள்ளார்.

china

என்னவென்றால், முன்னர் தொலைந்து போன அவரது மகளின் கையிலிருந்த அதே மச்சம் மணமகளின் கையிலும் இருந்திருக்கிறது. உடனே மணமகளின் பெற்றோரிடம் மகள் தத்தெடுக்கப்பட்டவரா என விசாரித்துள்ளார்.

கணவன்களுக்கு தெரிந்தே மனைவிகளை கர்ப்பமாக்கும் இளைஞர் - சமூக சேவையாம்..

கணவன்களுக்கு தெரிந்தே மனைவிகளை கர்ப்பமாக்கும் இளைஞர் - சமூக சேவையாம்..

அரங்கேறிய திருமணம்

தொடர்ந்து, அவர்களும், சாலையோரத்தில் கைவிடப்பட்ட நிலையில் குழந்தையைக் கடந்ததாகவும், அக்குழந்தையைத் தங்கள் மகளாகவே வளர்த்து வந்ததாகவும் கூறியுள்ளனர். இதையறிந்ததும் உடைந்து அழுத தாய், அனைவரிடமும் தனது மகள் பற்றிக் கூறியுள்ளார்.

தங்கையை திருமணம் செய்த நபர் - ட்விஸ்ட் கொடுத்த தாய்! | China Woman Sons Bride Is Her Lost Daughter

இதனையடுத்து அந்தத் தாய் தனது மகளைத் தொலைத்த பிறகு ஒரு ஆண் மகனைத் தத்தெடுத்து வளர்த்திருக்கிறார்.

அவர்தான் மணமகன் என்பதனால் திருமணம் எவ்வித இரத்த உறவுப் பொருத்தத் தடையும் இல்லாமல் நடைபெற்றுள்ளது. அந்தத் திருமணத்தின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.