ஆழ் கடலில் நீச்சலடித்த பெண்.. அடுத்து நொடி நடந்த பதபதைக்கும் சம்பவம் - viral video!
ஆழ் கடலில் நீச்சலடித்த பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
ஆழ் கடல்
மாலத்தீவில் உள்ள ஹுல்ஹுமாலே தீவு வடக்கு ஆண் அட்டோலின் தெற்கில் அமைந்துள்ளது. இங்கு சுற்றுலாவுக்கு வந்த நபர் ஒருவர் கடலில் டைவிங் செய்துள்ளார். போதுமான பாதுகாப்பு உபகரணங்களுடன் கடல் நீரில் மூழ்கி அவர் நீந்தி கொண்டிருந்துள்ளார்.
அப்போது திடீரென ஒரு டைகர் ஷார்க் வகை சுறா ஒன்று அவரை நோக்கி வேகமாக பாய்வதை காண முடிகிறது. அந்த பிரமாண்ட சுறா சில நொடிகளில் அங்கு நீச்சலடித்து கொண்டு இருந்த டைவரின் தலையை கடிக்க முயன்றது. பிற்கு தன் தாடையால் அவரை பிடித்துக் கொண்டு இழுத்தது.
பெண்..
பின்னர் அவரை விட்டுவிட்டு வேறுபக்கம் சென்று விட்டது. இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் அடங்கிய வீடியோ என்று சமூக வலைத்தளப்பக்கத்தில் படு வைரலாக பரவி வருகிறது. அந்த சுற்றுலா பயணி சீனாவை சேர்ந்த ஒரு பெண் என்பது தெரியவந்துள்ளது.
ஷார்க் கவ்வியது அதிர்ச்சியான சம்பவம் என்றாலும் அதிர்ஷ்டவசமாக அந்த பெண் உயிர் பிழைத்து அதிசயமான விஷயம்தான். னும் குறிப்பிட்ட அந்த டைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்.
மேலும் அந்த சுறா நன்கு இறுக்கமாக கவ்வியதால் அந்தப் பெண்ணின் தலையின் பின்பகுதியில் ஆழமான காயங்கள் ஏற்பட்டன. இதனை சரி செய்ய அந்த பெண்ணின் தலையில் 40 தையல்கள் போடப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.