4 நாட்களில் 5 கிலோ எடை குறைத்த பெண் - கடைசியில் ஷாக்!
இளம்பெண் ஒருவர் 4 நாட்களில் 5 கிலோ எடை குறைத்துள்ளார்.
எடை குறைப்பு
சீனா, ஜியாங்சு மாகாணம் சுசோவில் வசிக்கும் பெண் சென். இவர் நண்பர் ஒருவர் பகிர்ந்த விளம்பரத்தைப் பார்த்து, “ஒவ்வொரு ஊசியும் குறைந்தது 3.5 கிலோ எடையை குறைக்கும்” என்ற வாக்குறுதியை நம்பி, மூன்று ஊசிகளுக்கு 900 யுவான் (சுமார் ரூ.10,000) செலுத்தியுள்ளார்.

தொடர்ந்து பயத்தினால் பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட பாதியை மட்டுமே அவர் எடுத்துக் கொண்டுள்ளார். இந்த ஊசி அவரது வயிற்றுப் பகுதியில் போடப்பட்டது. ஆனால், அதனை போட்டுக் கொண்ட சில மணி நேரங்களிலேயே அவருக்கு குமட்டல், வாந்தி, பசியின்மை போன்ற பிரச்சனைகள் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து சென் கூறுகையில், “முதல் மூன்று நாட்களில் தினமும் ஒரு கிலோ வரை உடல் எடை குறைந்தது. நான்கு நாட்களில் மட்டும் மொத்தமாக 5 கிலோ வரை குறைந்தது”. ஆனால், நான்காவது நாளில் நிலைமை திடீரென மோசமடைந்தது. நான்காம் நாளில் பச்சை, மஞ்சள் நிற திரவங்களை வாந்தி எடுக்கத் தொடங்கினேன்.
இளம்பெண் விபரீதம்
மருத்துவர்கள் அது பித்தம் என்றும், என் வயிற்றின் புறணி ஏற்கனவே எரிந்துவிட்டதாகவும் கூறினர்.” ECG சோதனைக்குள் என் நிலைமை திடீரென மோசமடைந்தது. அப்போது திடீரென்று நான் இரத்தம் கக்கினேன், செரிமானப் பாதை காயமடைந்து இரத்தப்போக்கு ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் என் இதயத் துடிப்பு நின்றுவிட்டது. அவசர சிகிச்சையால் தான் உயிர் தப்பினேன்” எனத் தெரிவித்துள்ளார். மேலும், உடலில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளதால் குறைந்தது ஒரு வருடம் கருத்தரிக்க முயற்சிக்க கூடாது என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில், சட்டவிரோதமாக பெறப்பட்ட செமக்ளூட்டைடு, இயல்பாக டைப்-2 நீரிழிவு மற்றும் மருத்துவ ரீதியான எடை மேலாண்மைக்கு மட்டும் பயன்படுத்தப்படும் மருந்து, மீண்டும் பேக் செய்யப்பட்டு அழகுசாதன துறையில் எடை குறைப்பு ஊசியாக விற்கப்பட்டது தெரியவந்துள்ளது.