கட்டிப்பிடித்ததால் ரூ.3.73 லட்சம் கழிச்சுக்கலாம்; திருமணத்தை நிறுத்திய பெண் - இளைஞர் ஷாக்!
நிச்சயத்திற்கு பிறகு இளம்பெண் ஒருவர் திருமணத்தை நிறுத்தியுள்ளார்.
நின்ற திருமணம்
சீனா, பிங்டின்ஷான் எனும் பகுதியை சேர்ந்த இளம்பெண் திருமணத்திற்கு மாப்பிள்ளை தேடி வந்துள்ளார். அதன்படி, அதேபகுதியை சேர்ந்த இளைஞர் அறிமுகமாகி, டிசம்பரில் திருமணம் தேதி குறிக்கப்பட்டது.
தொடர்ந்து 2 பேருக்கும் நிச்சயதார்த்தம் வெகுவிமரிசையாக நடந்தது. அப்போது மணப்பெண்ணுக்கு ரூ.24 லட்சத்து 85 ஆயிரம் வரை வழங்கப்பட்டது. இந்நிலையில், இளம்பெண் திடீரென்று திருமணத்தை நிறுத்தி உள்ளார். மாப்பிள்ளை குறைவாக சம்பாதிக்கிறார்.
இதனால் திருமணத்தில் விருப்பம் இல்லை. திருமணத்தை நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். பின் இளைஞர் குடும்பத்தினர், இளம்பெண்ணிடம் திருமணத்துக்கு ஒப்புக்கொள்ளும்படி கேட்டும் மறுத்துள்ளார். இதையடுத்து இளைஞர் சார்பில் வழங்கப்பட்ட ரூ.24.85 லட்சத்தை திரும்ப வழங்கும்படி கேட்டனர்.
இளம்பெண் செயல்
அதற்கு இளம்பெண் ஒப்புக்கொண்டார். ஆனால், தன்னை கட்டிப்பிடித்ததற்கு 30 ஆயிரம் யுவான் (இந்திய மதிப்பில் ரூ.3,73,070) கட்டணமாக வேண்டும். இதனால் ரூ.2.73 லட்சத்தை எடுத்து கொண்டு மீதமுள்ள பணத்தை தருவதாக கூறினார். ஆனால் இளைஞர் குடும்பத்தினர் ஒப்புக்கொள்ளவில்லை.
இளைஞர் விருப்பப்பட்டு கட்டிப்பிடிக்கவில்லை. போட்டோஷூட்டின்போது போட்டோகிராபர் கேட்டு கொண்டதால் கட்டிப்பிடித்தார். இதனால் முழு பணத்தை தர வேண்டும் என்று கூறினர். இதையடுத்து இறுதியாக இளம்பெண்ணின் குடும்பத்தினர் முழு பணத்தையும் வழங்க ஒப்புக்கொண்டனர்.