“இந்த தவறான முடிவுக்கு விலை கொடுத்தே ஆகனும்”- அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா
உயிகர் என்று அழைக்கப்படும் முஸ்லிம் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த மக்கள் வடமேற்கு சீனாவின் ஜின்ஜியாங் பகுதியில் பரவலாக வாழ்ந்து வருகின்றனர்.
இந்த மக்களுக்கு எதிராக பல்வேறு இனவெறி தாக்குதல்கள் சீன அரசாங்கத்தால் நடத்தபட்டு வருகிறது.
சொந்த நிலத்திலேயே தாங்கள் அனுபவிக்கும் கொடுமைகளை சொல்லி கதறும் உயிகர் சமூகத்தை சேர்ந்த சிலரின் வீடியோ பதிவுகள் சில ஆண்டுகளுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி உலகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இது குறித்து பல உலக நாடுகளும் சீன அரசிடம் விளக்கம் கேட்டும் மனித உரிமை தாக்குதள் என கடும் எதிர்ப்புகளை தெறிவித்து வந்தனர்.
இதனால் உலக நாடுகளிடமிருந்து கடும் நெருக்கடியை சந்தித்து வர்கிறது சீன அரசு.
வெள்ளை மாளிகையிலும் இது குறித்து அமெரிக்கா மௌனம் சாதிப்பது ஏன் என கேள்வி எழுப்ப பட்டதை தொடர்ந்து அடுத்தாண்டு பிப்ரவரியில் சீனாவின் பெய்ஜிங் நகரில் நடக்கவிருக்கும் குலிர்கால ஒலிம்பிக் போட்டிகான அமெரிக்காவின் நிலைப்பாட்டை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பு செயலாளர் ஜென் சாக்கி, சீனாவில் உயிகர் சமூகத்தாயத்திற்கு எதிராக நடந்தேறி வரும் இனப்படுகொலை, மனித இனத்திற்கு எதிரான குற்ற செயல்கள் மற்றும் பல்வேறு மனித உரிமை தாக்குதல்கள் காரணங்களுக்காக அமெரிக்காவில் இருந்து அரசு அதிகாரிகள் யாரும் பெய்ஜிங்கில் நடக்கவிருக்கும் குலிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க மாட்டார்கள் என தெறிவித்திருக்கிறார்.
அமெரிக்காவின் இந்த நிலைபாட்டை குறித்து பேசியிருக்கும் சீனாவின் வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் சயோ லிஜியன் பேசுகையில்,
“வெறும் பொய்கள் மற்றும் வதந்திகளை அடிப்படையாக கொண்டு கொள்கை பாராபட்சங்கள் நோக்கத்தோடு பெய்ஜிங்கின் குலிர்கால ஒலிம்பிக்கில் அமெரிக்கா தலையிடுவது அவர்களின் கபடமான உள்நோக்கத்தையே வெளிப்படுத்துக்கிறது.
தந்திரமாக ஒலிம்பிக் போட்டிகளை புறக்கணித்திருக்கும் அமெரிக்காவின் இந்த தவறான முடிவிற்கு நிச்சயம் விலை கொடுத்தே ஆக வேண்டும். காத்திருங்கள்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.