காதலனுடன் உல்லாசம்; திடீரென வந்த மனைவி - 10வது மாடி பால்கனியில் தொங்கிய காதலி
பெண் ஒருவர் 10வது மாடி பால்கனியில் இருந்து தொங்கிய வீடியோ வைரலானது.
சிக்கிய காதலி
சீனாவின் குவாங்க்டோங் மாகாணத்தில் திருமணமான நபர் ஒருவர், மற்றொரு பெண்ணுடன் கள்ளக்காதலில் இருந்து வந்துள்ளார். இருவரும் பலமுறை நேரில் சந்தித்து தனிமையில் இருந்துள்ளனர்.

இந்நிலையில் சம்பவத்தன்று கள்ளக்காதலன் வீட்டுக்கே சென்று அந்த பெண் பேசியிருக்கிறார். அப்போது அந்த நபரின் மனைவி திடீரென்று வீட்டிற்குள் வந்துள்ளார். இதனால் பதறிப்போன கணவர், தன்னுடைய கள்ளக்காதலியை வெளிப்புற பால்கனியில் ஒளிந்து கொள்ளும்படி கூறியுள்ளார்.
வைரல் புகைப்படங்கள்
ஆனால் பயத்தில், காதலி பால்கனியின் மேல் பகுதியில் இருந்து, கீழே உள்ள வீட்டின் பால்கனி நோக்கி இறங்க ஆரம்பித்தார். அங்குள்ள 10-வது மாடியில் இருந்து குழாய் பைப்பை பிடித்து இறங்கினார். ஒரு கட்டத்துக்கு மேல் அந்த பெண்ணால் கீழே இறங்க முடியவில்லை.

இதனால் கீழே இருக்கும் வீட்டின் ஜன்னல் வழியாக உதவி கேட்டுள்ளார். உடனே அந்த வீட்டில் இருந்த நபர், வீட்டுக்குள் பாதுகாப்பாக இழுத்து, அந்த பெண்ணை பத்திரமாக மீட்டுள்ளார்.
இதனை அங்குள்ள அப்பார்ட்மென்ட் வாசிகள் வீடியோ எடுத்து, சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.