அத்தனை பேர் மத்தியில் வெளியேற்றப்பட்ட சீன முன்னாள் அதிபர் - கூனிகுறுகிய ஹூ ஜின்டாவோ... - அதிர்ச்சி வீடியோ..!
சீனாவில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் அத்தனை பேர் மத்தியில் சீன முன்னாள் அதிபர் வலுக்கட்டாயமாக ஹூ ஜின்டாவோ வெளியேற்றப்பட்டுள்ளார்.
வெளியேற்றப்பட்ட சீன முன்னாள் அதிபர்
சீனாவில் இன்று நடைபெற்ற மண்டப கூட்டத்தில், சீன முன்னாள் அதிபர் ஹூ ஜின்டாவோவிடம் கூட்டத்தை விட்டு வெளியேற பணியாளர்கள் கூறினர்.
ஆனால், ஹூ ஜின்டாவோ வெளியேற மறுப்பு தெரிவித்தார். ஆனாலும், விடாமல் அவரிடம் பணியாளர்கள் நீங்கள் உடனே இங்கிருந்து செல்ல வேண்டும் என்று கூறினர். அதனால, தன் இருக்கையில் எழுந்து நடந்த அவர், வழியில் ஜி மற்றும் லி கெகியாங்குடன் பேசுகிறார். ஆனால், அவர்கள் ஹூ ஜின்டாவோவிடம் பேசுவதை தவிர்த்தனர். இதனையடுத்து, வெளியேற விரும்பாத அவரை ஒரு பணிப்பெண் இழுப்பதை அந்த வீடியோவில் தெளிவாக இடம்பெற்றுள்ளது.
தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
Former Chinese president Hu Jintao was seen led out of the party congress meeting shortly after 11am. He appeared to not want to leave -- can clearly see a steward pulling him -- and stopped to speak with Xi and Li Keqiang on the way out https://t.co/0O6KtR9y9v
— Elizabeth Law 思敏 (@lizzlaw_) October 22, 2022