இந்தியாவுடன் தண்ணீர் போரைத் தொடங்கும் சீனா - எல்லையில் பதற்றம்

China India
By Thahir Jan 22, 2023 05:45 PM GMT
Report

இந்திய எல்லைப் பகுதியில் பாயும் ஆற்றில் மாபெரும் அணையை எழுப்பி இந்தியாவுடன் தண்ணீர் போரைத் தொடங்க சீனா திட்டமிட்டுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

வெளியான திடுக்கிடும் தகவல் 

உலகிலேயே மிக நீண்ட எல்லையை கொண்ட நாடுகளில் ஒன்று சீனா. இந்தியாவும் சீனாவும் சுமார் 4000கிமீ தொலைவை பகிர்ந்துகொண்டு இருக்கின்றனர்.

இந்நிலையில் இந்தியா, சீனா, நேபாளம் என்று மூன்று நாடுகளின் எல்லையில் சீனா அணையைக் கட்ட திட்டமிட்டுள்ளது.

China to start water war with India

நேபாள நாட்டின் தலைநகரான காத்மண்டுவைச் சேர்ந்த எபர்டஃபாஸ் செய்தி நிறுவனம் ஒன்று இதுபற்றி செய்தியை வெளியிட்டுள்ளது.

அணைகளை கட்டும் சீனா

சீனாவில் யார்லுங் சாங்போ என்று அழைக்கப்படும் இந்த நதி அருணாச்சல பிரதேசத்தில் சியாங் என்றும், அசாமில் பிரம்மபுத்திரா என்றும் அழைக்கப்படுகிறது.

உத்தரகாண்ட்டின் காலாபானி பகுதிக்கு எதிரே இந்த அணை அமைக்கப்பட உள்ள நிலையில், நதியின் போக்கைப் பாதிக்கும் இந்த கட்டுமானம் இந்தியாவின் நீர் வாய்ப்புகளைப் பாதிக்கும் என்று கூறப்படுகிறது.

சமீபத்தில் வெளியான சாட்டிலைட் படங்கள் அணைக்கான கட்டுமானங்கள் தொடங்கப்பட்டுள்ளது என்று தெரிகிறது.

இதன் மூலம் கோடைக் காலங்களில் சீனாவில் இருந்து நீரை இந்தியாவுக்கு அனுப்பாமல் வைக்க முடியும். அதேபோல வெள்ளம் அதிகம் ஏற்படும்போது, அணையில் இருந்து அதிகப்படியான நீரைச் சீனா திறந்தால் அது இந்தியப் பகுதிகளில் திடீரென வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தும் ஆபத்தும் உள்ளது.

China to start water war with India

தண்ணீர் போரை தொடங்குவதற்கு ஆயத்தமா?

அணைக்கட்டு மட்டுமின்றி, இதே பகுதியில் சீனா ஒரு விமான நிலையமும் கட்டிக்கொண்டிருக்கிறது. பணிகள் நிறைவு பெற்றதும் அந்த விமான நிலையம் சீன விமானப்படையின் பயன்பாட்டுக்கு விடப்பட வாய்ப்பு உள்ளது.

தொடர்ந்து இந்திய திபெத் எல்லைப்புறங்களில் பெரிய பெரிய அணைக்கட்டுகளை எழுப்பிக்கொண்டிருக்கும் சீனா, எதிர்காலத்தில் இந்தியாவுடன் தண்ணீர் போரை தொடங்குவதற்கு ஆயத்தமாகிறது என்றும் குற்றம்சாட்டப்படுகிறது.

இதனால் ஆசியாவின் முக்கிய ஆற்றுப்பகுதிகளில் சுற்றுச்சூழல் சீர்குலைவு உண்டாகும் என்றும் சர்வதேச அரசியல் நோக்கர்கள் சீனாவை விமர்சிக்கின்றனர்.