பயன்படுத்தப்பட்ட ஆணுறைகளை வைத்து வினோத மோசடி - மாணவர் சிக்கியது எப்படி?

China Money
By Karthikraja Dec 01, 2024 03:30 PM GMT
Karthikraja

Karthikraja

in சீனா
Report

பழைய ஆணுறை, கரப்பான் பூச்சிகளை வைத்து மாணவர் பல ஹோட்டல்களில் மோசடி செய்துள்ளார்.

வினோத மோசடி

சீனாவின் Zhejiang மாகாணம் Taizhou வைச் சேர்ந்த 21 வயதான மாணவர், ஜியாங் என்ற குடும்பப்பெயரால் அறியப்படுகிறார். இவர் கடந்த செப்டம்பர் மாதம் முதல் பெற்றோர் கல்வி செலவுக்காக வழங்கிய பணத்தை வைத்து வினோத மோசடியை அரங்கேற்றியுள்ளார். 

china student cockroach condom hotel

அடிக்கடி ஹோட்டல்களுக்கு சென்று தங்கும் இவர், ஹோட்டல் அறைகளில் இறந்த கரப்பான் பூச்சி, பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள், தலைமுடி ஆகியவற்றை வைத்துவிட்டு ஒன்றும் தெரியாதது போல், ஹோட்டல் நிர்வாகத்தை அழைத்து அறை சுகாதாரமாக இல்லை என புகார் அளிப்பார்.

பணம் பறிப்பு  

இழப்பீடு கொடுங்கள் அல்லது தான் தங்குவதற்கு பணம் கேட்கக்கூடாது இல்லையெனில் சுகாதாரமற்ற அறையை வீடியோ எடுத்து, இணையத்தில் வெளியிட்டு ஹோட்டல் குறித்து அவதூறு பரப்புவேன் என மிரட்டியுள்ளார். 

இதனால் நற்பெயர் மற்றும் வருமானம் இழக்க நேரிடும் எனும் அச்சத்தில் ஹோட்டல் நிர்வாகங்கள் ஜியாங் கேட்கும் பணத்தை அளித்துள்ளன. இதே போல் கடந்த 10 மாதங்களாக 63 ஹோட்டல்களில் மோசடி செய்து 38,000 யுவான் (இந்திய மதிப்பில் ரூ4.39 லட்சம்) பணம் பறித்துள்ளார்.

போலீஸ் விசாரணை 

கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு ஹோட்டலுக்கு சென்று இதுபோல கரப்பான் பூச்சி, ஆணுறைகளை வைத்து 400 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.4700) பணம் பறிக்க முயன்றுள்ளார். சந்தேகமடைந்த ஹோட்டல் நிர்வாகம், போலீசிடம் புகார் அளித்துள்ளார். 

china student cockroach condom hotel

புகாரின் அடிப்படையில் அவர் தங்கிய ஹோட்டல் அறையில் சோதனை நடத்திய போலீசார், அவரிடம் இருந்த இறந்த கரப்பான் பூச்சிகள், பயன்படுத்திய ஆணுறைகள் உட்பட மோசடிக்கு பயன்படுத்திய பொருட்கள் அடங்கிய 23 பைகளை கண்டுபிடித்தனர்.  இதனையடுத்து அவரை கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.