சீனா உளவு கப்பல்…இந்தியாவில் இதையெல்லாம் திருடும் - திடுக்கிடும் தகவல்..!
கடந்த சில நாட்களுக்கு முன்பு இலங்கை வந்த சீனாவின் யுவான் வாங் 5 என்ற உளவு கப்பல் இலங்கையில் உள்ள ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.
இலங்கை வந்த உளவு கப்பலால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என வைகோ, மருத்துவர் ராமதாஸ் உள்ளிட்டோர் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து எச்சரிக்கை விடுத்தனர்.

இந்தியாவில் இதை திருட முடியும்
இந்த நிலையில் இலங்கை வந்து நிறுத்தப்பட்டுள்ள உளவு கப்பல் இந்தியாவின் பல தகவல்களை திருட வாய்ப்பு உள்ளதாக மூத்த பத்திரிக்கையாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பிரபல தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ள அவர், இந்தியாவில் நிறைய ராணுவ தடவாளங்கள் இருக்கிறது.
தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் ஐ.என்.எஸ் கட்டபொம்மன் என்ற கடற்படை தகவல் தொடர்பு தளம் உள்ளது.
கார்வால் பகுதியில் கடற்படை தளம் அமைந்துள்ளது.கொச்சியில் கடற்படை ஆராய்ச்சி அமைப்பு உள்ளது.துாத்துக்குடி துறைமுகம், சென்னை துறைமுகம் ஆகியவை உள்ளது.
இந்த கப்பல் என்ன செய்யும்?
இந்த கப்பல் என்ன செய்யும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். இந்த கப்பல் செயற்கைக்கோளை கண்காணிப்பு (Satellite Tracking). அதாவது செயற்கைக் கோளை கண்காணிக்கும் இந்த துறைமுகத்தில் இருந்து ராணுவம் எப்படி தொடர்பு கொள்கிறது.
கடற்படை கப்பலில் இருந்து எப்படி கையாள்கிறார்கள் என்பதையெல்லாம் இந்த கப்பலால் உளவு பார்க்க முடியும். ஐ.என்.எஸ் கட்டபொம்மன் தளத்தில் இருந்து எப்படி செயற்க்கைகோளை தொடர்பு கொள்கிறார்கள் அதில் ஏதேனும் புதிய தெழில்நுட்பம் வந்திருக்கிறதா?
கூடங்குளம் அனல் மின் நிலையம் , கல்பாக்கம் அனல் மின் நிலையம் எப்படி செயல்படுகிறது. இதையனைத்தையும் அந்த கப்பலால் உளவு பார்க்க முடியும் என தெரிவித்துள்ளார். இந்த செயற்க்கைகோள் எங்கெல்லாம் செல்கிறது.
சூடுபிடிக்கும் சீனக்கப்பல் விவகாரம்..! தயார் நிலையில் இந்தியா: ஆதரவாக களமிறங்கும் அமெரிக்கா