இந்தியாவின் அழுத்தத்தால் சீனா கப்பல் வருகை ஒத்திவைப்பு - இலங்கை அதிரடி..!
சீனாவின் ஆய்வு மற்று ஆராய்ச்சி கப்பல் 'யுவான் வாங்' வரும் 11ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை இலங்கையில் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தப்பட இருந்தது.
கோரிக்கை வைத்த இந்தியா
இந்திய பெருங்கடலில் கண்காணிப்பு மற்றும் நேவிகேஷன் பணிக்காக இந்த கப்பலை அனுப்புவதாக சீனா தெரிவித்த நிலையில், இந்திய பெருங்கடல் பகுதிக்கு கப்பல் வருவது பாதுகாப்பு அச்சுறுத்தலாக கருதப்பட்டது.

மேலும் இந்தியா தனது கவலையை இலங்கையிடம் பதிவு செய்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் சீனாவுக்கு உளவு கப்பல் வருகையை ஒத்திவைக்குமாறு சீனாவுக்கு இலங்கை அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
இதையடுத்து சீனாவிடம் திட்டமிட்டபடி கப்பல் வருகையை முன்னெடுத்து செல்ல வேண்டாம் எனவும், கப்பல் வருகையை நிறுத்துமாறும் இலங்கை வெளியுறவு அமைச்சகம் சீன தூதரகத்திடம் கோரிக்கையில் தெரிவித்துள்ளது.
இதனால் சீனாவின் உளவு கப்பல் தற்போதைக்கு இலங்கையில் நிறுத்தப்படாது இன்று தகவல்கள் வெளியாகி உள்ளன.