பெண் இல்லாமலே குழந்தை பெற்றுக்கொள்ள முடியுமா? விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு
சீன விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு பெண் இல்லாமல் குழந்தை உருவாக்கும் ஆய்வுக்கு தொடக்கமாய் அமைந்துள்ளது.
எலி பரிசோதனை
பொதுவாக மனிதர்களின் சில உடல் நல குறைவுகளுக்கு தீர்வு காணவோ, புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட மருந்துகளை பரிசோதிக்கவோ விஞ்ஞானிகள் விலங்குகள் மீது பரிசோதனைகளை மேற்கொள்வார்கள்.
அதிலும் எலி போன்ற உயிரினங்கள் மனிதர்களின் பல்வேறு தன்மைகளுடன் ஒத்துப்போவதால் சோதனை முயற்சிகளில் எலி அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
பெண் இல்லாமல் குழந்தை
இந்நிலையில் சீனாவை சேர்ந்த விஞ்ஞானிகள், பெண் எலி இல்லாமல் இரு ஆண் எலிகளின் உயிர் அணுக்களை வைத்து புதியதாக ஒரு எலி குட்டியை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.
முன்னதாக 2023 ஆம் ஆண்டு ஜப்பானை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இதேபோன்ற சாதனையை நிகழ்த்தினர், ஆனால் அந்த எலி குட்டியின் ஆயுட்காலம் குறைவாக இருந்தது. தற்போது சீன விஞ்ஞானிகள் உருவாக்கிய எலியானது பருவமடையும் வரை உயிர் பிழைத்துள்ளது.
இதன் மூலம், எதிர்காலத்தில் மனிதர்களும் பெண் துணை இல்லாமல் ஆண்களே இணைந்து குழந்தை பெற்றுக்கொள்ள முடியும் என்ற நிலை உருவாகலாம் என கூறப்படுகிறது.