மைக்ரோசாப்ட் நிறுவனத்தை "ஹேக்" செய்த சீனா..

Microsoft Hacked by china
By Petchi Avudaiappan Jul 21, 2021 11:37 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in உலகம்
Report

மைக்ரோசாப்ட் உள்ளிட்ட அமெரிக்க நிறுவனங்களை ஹேக் செய்ததாக 4 சீனர்கள் மீது அமெரிக்க அரசு குற்றம்சாட்டியுள்ளது.

2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் நிறுவனம், கணினி தாக்குதலுக்கு உள்ளானதாக புகார் எழுந்தது. இதுதொடர்பான விசாரணையில், சீன அரசு உதவியுடன் அமெரிக்காவின் பல நிறுவனங்கள் ஹேக் செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக அமெரிக்க நீதித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் 4 சீனர்கள் இந்த ஹேக் செய்யும் பணியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் சீன நிறுவனங்களுக்கும், அவர்களது வியாபாரத்துக்கும் உதவும் வகையில் அமெரிக்க அரசுத்துறைக்கு சொந்தமான கணினிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் கணினிகளும் ஹேக் செய்யும் பணியில் ஈடுபட்டது கூறப்பட்டுள்ளது.