வாவ்... போக்குவரத்து நெரிசலை குறைக்க... பறக்கும் டாக்ஸி... - வைரலாகும் வீடியோ

Dubai Viral Video
By Nandhini Oct 12, 2022 11:41 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

போக்குவரத்து நெரிசலை குறைக்க, பறக்கும் டாக்ஸிக்கான சோதனை துபாயில் நடத்தப்பட்டது.

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ

வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு சீன நிறுவனம் கடந்த திங்கள்கிழமை துபாயில் மின்சார பறக்கும் டாக்ஸியை சோதனை செய்தது.

போக்குவரத்து நெரிசலை முறியடிக்க, வீட்டு வாசலிலிருந்து விமானப் பயணத்தில் விரைவாக இலக்கை அடைவதற்கான இந்த சோதனை தீர்வை கொடுத்துள்ளது.

இதற்காக சீனாவின் XPENG AEROHT, கடந்த ஆண்டு $500 மில்லியன் திரட்டியது. இதனையடுத்து, கடந்த திங்கட்கிழமை துபாயில் அதன் X2 பறக்கும் டாக்ஸியின் முதல் பொதுக் காட்சியை, தற்போது எமிரேட்டில் நடந்து வரும் GITEX 2022-ஐ ஒட்டி நடத்தப்பட்டுள்ளது.

இந்த பறக்கும் டாக்ஸியை முன்பதிவு செய்ய Appம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக XPENG AEROHT நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

china-s-xpeng-aeroht-x2-flying-taxi-in-dubai