சீனா அடாவடி - அருணாசல பிரதேசத்தின் 11 இடங்கள் பெயர் மாற்றம்

China India
By Sumathi Apr 04, 2023 09:45 AM GMT
Report

அருணாசல பிரதேசத்தின் 11 இடங்களின் பெயரை சீனா மாற்றியுள்ளது.

அருணாச்சலப் பிரதேசம்

அருணாச்சலப் பிரதேசத்திற்கு உரிமை கொண்டாடி வரும் சீனா, அதனை தன்னாட்சிப் பிராந்தியமான திபெத்தின் ஒரு அங்கம் எனக் கூறி வருகிறது. திபெத்தின் தெற்கில் உள்ள ஜங்னன் பகுதியை சீனா ஜிஜாங் என குறிப்பிடுகிறது.

சீனா அடாவடி - அருணாசல பிரதேசத்தின் 11 இடங்கள் பெயர் மாற்றம் | China Renames 11 Places In Arunachal Pradesh

இதனை சேர்ந்த 11 இடங்களின் பெயர்களை சீன உள்துறை அமைச்சகம் மாற்றி உள்ளது. மேலும், தலைநகரான இடா நகரின் அருகில் உள்ள ஒரு நகரின் பெயரையும் மாற்றியுள்ளது.

சீனா அத்துமீறல்

5 மலை முகடுகள், 2 புகழ்பெற்ற பகுதிகள், 2 நிலப் பகுதிகள், 2 ஆறுகள் தங்கள் நாட்டின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளின் பெயர்களை மாற்றுவதுபோல் சீனா பெயர் மாற்றம் செய்துள்ளது. ஏற்கனவே, 2017ல் 6 இடங்களின் பெயர்களையும், 2021ல் 15 இடங்களின் பெயர்களையும் மாற்றியது.

இது தொடர்பாக இந்திய வெளியறவுத்துறை செய்தி தொடர்பாளரர் அரிந்தம் பாக்சி, 'எதார்த்தத்தை மாற்றாத பெயர்களை சீனா கண்டுபிடித்து வருகிறது. இதுபோன்ற செய்திகளை நாங்கள் பார்த்தோம். இது போன்ற முயச்சியை சீனா மேற்கொள்வது முதல் முறை அல்ல.

இதை நாங்கள் முற்றிலும் நிராகரிக்கிறோம். அருணாசல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதியாக உள்ளது. இருந்து வருகிறது. தொடர்ந்து இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.